அஷ்டமா சித்து-3

Advertisements

வான சாஸ்திரத்திலும் ஜோதிடத்திலும் மிகப் பெரிய முன்னோடியாக திகழ்ந்தவர் வராகமிகிரர். விக்ரமாதித்தன் காலத்தில் அவனது அவையை அலங்கரித்த அவர் அன்றே இந்த பூமி உருண்டையானது என்பதிலிருந்து சந்திரன் சுயமாக ஒளிர்வதில்லை. சூரியனால்தான் அது ஒளிர்கிறது என்று உலகுக்கு கூறியவர்.

ராசி மண்டலம் பற்றியும் கிரகங்களின் வீச்சு பற்றியும் மிக நுட்பமாக அறிந்தவர். இவரே ஒரு மனிதனின் மன அமைப்பும் அதில் அவன் சிந்திக்கும் முறைகளும் சந்திர சூரியர்களை பொருத்தே அமையும் என்று கூறியவர்.

இவர்களுடன் புதனும் சுக்கிரனும் சேர்ந்து பலமுடன் செயல்பட்டும்,மற்ற ஐந்து கிரகங்கள் (சனி செவ்வாய் ராகு கேது குரு) தங்கள் சுழற்சியில் நற்பலன்களை மட்டுமே தருபவர்களாக இருந்து விட, அதற்கு ஜாதகரின் பூர்வபுண்ணியமும் துணை செய்யும் நிலையில்,அந்த ஜாதகன் இந்த மண்ணையும் மனிதர்களையும் மற்ற யாவற்றையும் படைத்த கடவுளுக்கு இணையான வல்லமையை பெறுவான்.

சுருக்கமாய்ச் சொல்வதானால் அஷ்டமா சித்துக்களும் தேடி தானாய் ஓடி வரும்.

ஆனால் காலச்சுழற்சியில் அப்படி ஒரு கிரக சஞ்சார அமைப்பு மிக மிக அபூர்வமானது என்று குறிப்பிட்ட அவர் அப்படி ஒரு கிரக சஞ்சார அமைப்பு எப்பொழுதெல்லாம் வரும் என்று கணக்கிட்டு ஒரு நூலினை எழுதினார். ஆனால் அதை காலம் கொண்டு சென்று விட்டது.

ஆயினும் அப்படி ஒரு கால அமைப்பு வராமல் போக வில்லை .அந்த அமைப்பிலமானிடப் பிறப்பும் நிகழாமல் போகவில்லை.

துளியும் கர்வத்துடனோ தனது ஆற்றலை பிறருக்கு காட்டி அவர்களை கவயவோ முயலான்.

அவன் மரணிக்கும் வரையிலும் தனது பேராற்றலை ஒரு ரகசியமாகவே வைத்திருப்பான்.

காரணம் அந்த ஆற்றலை விட பெரியது, அதைக் கொண்டு அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி வாழ்வதும் அதன் மூலம் ஒரு சிறு சலனத்தை கூட உலகில் உருவாக்காமல் இருக்க வேண்டும் என்பதும் தாம்.

வியாக்ரபாதர் தவம் என்று ஒரு ஜோதிடர் சதா வானத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பார்.

அசத்தலான பேர்வழி. அவரை யாராவது பார்க்கப் போனால் வந்தவரிடம் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று பொட்டில் அடித்த மாதிரி கூறிவிடுவார் .

கேட்டால் எல்லாம் ஒரு கணக்குதான் என்பது என்ன கணக்கு என்றால் சிரிப்பார்.

நீ மனுஷனா பிறந்தது ஒரு கணக்கு இன்னாருக்கு மகனாய் என்ன இடத்தில் பிறந்து அது கூட ஒரு கணக்குதான் இதோ இப்ப நீயும் நானும் சந்தித்து பேசி இருக்கோம் அது கூட ஒரு கணக்குதான் என்பார்.

எதைப் பார் கணக்கு என்று சொன்னால் எப்படி?

எப்படி என்று நிரூபியுங்கள் என்று ஒரு நாள் ஒருவர் அவரிடம் முட்டி மோதினார்.

அப்படி மோதியவருக்கு ஒரு பையன். அவன் சிறு வயதிலேயே காணாமல் போய்விட்டான்.

இன்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் கூட அடையாளம் தெரியாது அந்த விவரம் வியாக்ரபாதத்துக்கு தெரியும்.

அந்த விஷயத்தை வைத்தே கேள்வி கேட்டவனை மடக்கினார் வியாக்ரபாதம்.

ஓம்! நீர் உன் பையனோட தான் இருக்கீர். பையனோட தான் இருந்தாகணும்னு ஜாதகம் சொல்றது.

அதே சமயம் அவன் பிரிஞ்சு போய்ட்டா என்ற வேதனையை அனுபவிக்கணுமோ அதையும் அனுபவிக்கணும் னு உள்ள விதியில இருக்கு.

ஆகையால் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா உங்களோட இருக்கிற ஒரு பையன் குறிப்பா நீங்க பாசம் செலுத்தற ஒரு பையன் உம்ம சொந்த பையனாவே இருக்கணும்.

இதை நீங்க கண்டுபிடித்து தெரிஞ்சிக்கோங்க என்றார்.

அவரும் தம் வீட்டு மாடியில் குடி வைத்திருக்கும் இளைஞனைப் பற்றி தோண்டித் துருவி விசாரித்ததில் அவன் தன் மகன் என்பது பிறகு ஊர்ஜிதமாகியது .

உண்மைதான்!

எல்லாமே ஒரு கணக்குத்தான்!

யாரை, யார் எப்பொழுது எப்படி சந்திக்க வேண்டும் என்பது முதல் பிரிவு வரை எல்லாமே கணக்கு தான்.

அந்த கணக்கை கர்மங்கள்தான் உருவாககு்கிறதாம். வியாக்கிரபாதம் அடித்துக் கூறுகிறார்

You may also like...

Leave a Reply