அஷ்டமா சித்து-4

Advertisements

அந்த நாளில் தமிழ் வளர்த்த மதுரையிலேயே சமணமும் பௌத்தமும் தழைத்திருந்தன. சைவம் வைணவம் எல்லாம் அறவே இல்லாத ஒரு நிலையில், சமணமும் பவுத்தமும் மட்டுமே மனிதர்களின் சமயம் என்கிற ஒரு நிலை இருந்தது.

இதில் பல பௌத்த பிக்ஷுக்கள் தவமியற்றிய நிலையில் அப்படியே அந்தரத்தில் மிதந்தார்கள் .இன்னும் சிலர் ஆகாய மார்க்கத்தில் ஏதோ தெருக்களில் நடந்து செல்வது போல நடந்து சென்றனர் .இதைப் பார்த்த மக்களும் அதை மிக தெய்வீகமாகவும் அற்புதமாகவும் கருதி அவர்கள் வழி நடந்தனர்.

ஆனால் அதில் உதான வாயுவை பயன்படுத்தி செயல்படும் பயிற்சியும் சூட்சுமமும் தான் இருந்தது .அந்தப் பயிற்சியில் அவர்கள் தலைசிறந்து விளங்கினார்கள் .

காரணம் அவர்களது புலனடக்கம் ஐம்புலனையும் சுருக்கி உள்ளொளியைப் பெருக்கி கொள்வதில் நிகர் இல்லாதவர்களாக விளங்கிய அவர்களின் சாகசத்தை ஒரு மாயமாக உலகம் பார்த்தது .ஆனால் உண்மையில் அது அஷ்டமா சித்தியில் ஒன்றான இலஹிமா ஆகும்.

மனிதன் இடம் விட்டு இடம் செல்ல முதலில் கண்டறிந்த விஷயம் ஒரு சக்கரம் ஆகும் .அதில் இருந்துதான் வண்டிகள் தோன்றின .

அதன் பரிணாம வளர்ச்சியில் இன்று பெட்ரோல் டீசலில் இயங்கும் கார் பஸ்கள் வந்து விட்டன. ஆகாய மார்க்கத்தில் பயணிக்க அவன் கண்டறிந்தது விமானங்கள் அதைக் கூட இந்த நூற்றாண்டில்தான் கண்டறிந்ததாக நாம் நம்புகிறோம்.

ஆனால் வரலாற்றை உற்று பார்த்தால் முந்தைய காலத்தில் பௌத்த சன்யாசிகள் இன்றைய விஞ்ஞானி்களைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மேதைமையுடன் இருந்திருப்பது தெரியவருகிறது.

அகஸ்த சம்ஹிதை கலித சூத்ரா,கரண் மூலா போன்ற நூல்களில் விமானம் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

உடலை கோவிலாக கருதி அதை பேணுவதில் பௌத்தர்கள் சமர்த்தர்கள். சைவமும் வைணவமும நம் மண்ணில் அவர்களை அழித்து ஒழித்து விட்டது என்பதே உண்மை .அதில் அவர்களின் ஆற்றலுக்குச் சான்றாக பல குறிப்புகள் அழிந்துவிட்டன.

அதன்படி உதானவாயுவை எவ்வளவு உள்ளிழுக்க வேண்டும் எவ்வளவு அதை வெளியில் விட வேண்டும் என்பதில் தான் ஒருவர் எடை குறைந்து லேசாவதும் ஆகாயத்தில் பறப்பதும் நிகழ்கிறது.

புராணங்களில் வரும் எல்லோரிடமும் அஷ்டமாசித்து விஷயங்களே இறைந்து கிடக்கின்றன. பூமியில் நமது மனித சமூகத்தில் ஒருவர் காரில் வந்து இறங்குகிறார். கம்ப்யூட்டரை இயக்குகிறார் .ஆங்கிலம் பேசி எழுதவும் செய்கிறார் .இதை அவர் கற்று வைத்திருக்கும் விஷயமாக பார்க்கிறோம் .

அதேபோல் களத்துமேட்டில் வயற்காட்டில் மண்வெட்டியுடன் பாடுபடும் ஒருவனுக்கு விவசாயம் மட்டும் தான் தெரியும் என்று கருதுகிறோம் .இதே மனித கூட்டத்தில் அழகாக ஒருவரால்தான் பாட முடிகிறது. மற்றவர்களால் கேட்டு மகிழ தான் முடிகிறது.

இது அப்படியே சண்டை பேச்சு விளையாட்டு என்று எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.

எல்லாம் தெரிந்த ஒருவர் இருந்தால் அவரை சகலகலாவல்லவர் என்கிறோம். மனித வாழ்வின் இதே பரிமாணம்தான் தேவர் உலகில் வேறு விதத்தில் இருந்தது.

காலம் இடம் இரண்டையும் வென்றவர்களாக அவர்கள் இருந்தனர். அதனால் நினைத்த இடத்தில் தோன்ற முடிந்தது.

அதேபோல உயரமாய் கட்டையாய் மாறும் ஆற்றல் நினைத்ததை அடையும் ஆற்றல் படைக்கும் ஆற்றல் எல்லாமே அவர்களிடம் இருந்தது. ஆனால் அந்த செயல்களுக்கு அடித்தளம் அஷ்டமாசித்து தான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் .

ஒருவருக்கு 8 சித்தியில் எத்தனை சித்து கைவரப் பெற்று இருக்கிறதோ அதற்கேற்ப அவரிடம் வல்லமை காணப்பட்டது.

விஸ்வாமித்திரர் இதனாலேயே திரிசங்கு சொர்க்கத்தை் படைக்க முடிந்தது. நாரத மகரிஷியும் 14 உலகிற்கும் நினைத்த மாத்திரம் சென்று வர முடிந்தது.

அஷ்டமா சித்தியின் இலஹிமா ஆற்றல் பலரிடம் வெளிப்பட்டு இருக்கிறது .அதை பார்த்து அவர்களை கடவுளாக கருதி தொழும்ஒரு நிலை பின்னர் உருவானது

கடல்நீரமேல் இயேசுநாதர் நடந்து காட்டியது இலஹிமா கைவரப் பெற்றதால் தான்.பாற்கடலில் பறந்தாமன் பாம்பின் மேல் பள்ளி கொண்டு இருப்பதும் இலஹிமாவால் தான் .

ஒன்றுக்குப் பலவாய் முகம் கொண்ட நாகங்கள் உதான வாயுவை உள்வாங்கி விடும் செயலாற்றலால் தான் கடல் நீரில் மிதக்கின்றன.

நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள வாயுக்கலவையை பிரித்து அறிந்து, பின் அதில் உரியதை உள் அடக்கி, விட வேண்டியதை வெளியே விட்டு, செய்யப்படும் இந்த செயல் பயிற்சியால் மிக சுலபமாகிவிடும்.

ஒரு சைக்கிளை ஓட்டுபவர் ஒரே சமயத்தில் பேலன்ஸ் செய்து பெடலை மிதித்து ப்ரேக்கை பிடித்து கூட்டியும் குறைத்தும் பலவிதமாய் செயல்படுகிற மாதிரியான ஒரு விஷயமே இது .

அதே நபர் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது , ‌ஒன்றை செய்யும் போது இன்னொன்று பிடிபடாமல் எத்தனை முறை கீழே விழுந்திருப்பார்.

இந்த வாயு பயிற்சியும் அப்படியே. இதற்கு உரிய குருநாதரிடம் முறையான விதத்தில் பயிற்சி பெற்று யோகங்களை கற்றுக் கொள்வதும் மிக முக்கியம்.

எடை மிக அதிகமாய் உள்ள ஒன்று மிதப்பது என்பது சாத்தியமில்லை, என்றே முதலில் மனிதன் நினைத்தான்.

அதன்படி பார்த்தால் எடை அதிகமுள்ள எதுவும் மிதக்க முடியாது மூழ்கிவிடும் இது பறப்பதற்கும் பொருந்தும்.

ஆனால் பின்னர் அவனே பல ஆயிரம் டன்னில் கப்பல் செய்து கடலில் மிதக்க விட்டான்.

விமானம் செய்து வானில் பறக்க விட்டான் .ஒரு பொருள் திடமாக இருப்பதாலேயே மூழ்கி விடும் என்று இல்லை .அது மிதப்பதற்கு ஏதுவான வினைகளை செய்தால் தனது எடையை இழக்கின்றது.

இது பறப்பதற்கும் பொருந்தும் எண் பேராற்றல் என்னும் அஷ்டமாசித்து அதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது.

உலகில் மிக மேலான ஒரு கல்வி ஒன்று உண்டென்றால் அது அஷ்டமாசித்து தான்.

இதில் பேராசிரியராய் திகழ்பவன் அந்த பரமன். அவனது தக்ஷிணாமூர்த்தி கோலம் மௌனமாய் நமக்கு எண் பேராற்றலை உபதேசிக்கிறது.க்ஷ

பல சித்த புருஷர்களும் இந்த ஆற்றலில் சிறந்து இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com