அஷ்டமா சித்து-5

Advertisements

கிருஷ்ணாவதாரத்தில் இலஹிமாவின் சிறப்பு பளிச்சென்று உணரும் விதத்தில் உள்ளது.

. கண்ணனின் பத்தினியான சத்யபாமாவின் ஒரு செயல் மூலம் அது தெரிய வருகிறது.

சத்தியபாமா மிகுந்த செருக்குடன் தன் செல்வ வளத்தை கண்ணனுக்கு உணர்த்த அவர் எடைக்கு எடை பொன்னும் மணியும் தரும் சம்பவம் ஒன்று அதை உணர்த்தும்

தராசின் ஒரு தட்டில் கண்ணனை அமர்த்தி மறுதட்டில் பாளம் பாளமாக தங்கத்தையும் நவமணி களையும் கொட்டுகிறாள்.

எவ்வளவு கொட்டியும் கண்ணனின் எடைக்கு எடையாக அவளால் நிரப்ப முடியவில்லை.மாயாவி கண்ணன் ஏதாவது நாடகமாடுகின்றானா? அவளே கண்ணனிடம் அதை கேட்கிறாள். என்ன இது நான் அரண்மனை செல்வங்கள் அவ்வளவையும் கொட்டிக் குவித்து விட்டேன். நீங்கள் தான் ஏதோ மாயவேலை காட்டுகிறீர்கள் என்கிறாள்.

கண்ணன் சிரிக்கிறான் சரியான மாயப் புன்னகை . அவளுக்கும் புரிந்து போகிறது.

கண்ணனுக்கு இதெல்லாம் தேவையே இல்லை இதனால் அவனை சந்தோஷ படுத்த முடியாது .

கண்ணனின் எதிர்பார்ப்பும் இதுவல்ல என்று உணர்பவள் அவனை பொருளைக் காட்டி மயக்கவோ அடக்கவோ முடியாது என்று புரிந்தவளாக பக்தியோடு ஒரே ஒரு துளசி இலையை எடுத்து தராசுத் தட்டில் வைக்கிறாள்.

தராசு சீராகிறது .துளசி கண்ணனின் எடையை உடையதா? இல்லை கண்ணன்தான் துளசியின் எடைக்கு தன்னை மாற்றிக்கொண்டானா?.

கண்ணனே பதில் தருகிறான். சத்யபாமாவிற்கு உண்மையை புரிய வைக்க தன்னை அளப்பரிய பாரம் கொண்டவனாய் கரிமா மூலம் மாற்றிக்கொண்ட கண்ணன், அவள் பக்தியோடு செயல்படவும் தன்னைஇலஹிமாவால் பஞ்சாக்கிக் கொள்கிறான் .

இங்கே கரிமாவையும் சரி, இலஹிமாவையும் சரி காற்றைக் கொண்டே வினைபுரிந்த கண்ணன் அது எப்படி என்று கூறவில்லை.

ஆயினும் அஷ்டமாசித்து பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் அது உதானவாயுவைக் கொண்டு நிகழ்த்தியது என்று.

ஆகாயத்தில் ஏதும் இல்லை .அது தடைகளற்ற ஒரு திறந்தவெளி .அந்த வெளியில் காற்றின் பொருட்டு புவி ஈர்ப்பு விசையானது செயல்பட்டபடி இருக்கிறது.அதன்படி அந்த விசையின் எடையைவிட குறைவானவையே ஆகாயத்தில் மிதக்க முடியும் அல்லது அந்த எடையை எதிர்த்து செயல்பட முடிந்தவை மிதக்க முடியும் அல்லது பறக்க முடியும் .

ஒரு மனிதர் புவியீர்ப்பு விசையை விட குறைவான எடையை கொள்ளுதல் சாத்தியமா ?

பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவான ரத்தமும் சதையும் நிறை உள்ளவை தானே ? அது எப்படி எடை அற்றுப் போகமுடியும்? போன்ற கேள்விகளுக்கு விடை ஆகாயத்தையும் பூமியையும் இணைத்தபடி இருக்கும் காற்றிடம் தான் உள்ளது.

மெல்ல வீசினால் தென்றல். வேகமாக வீசினால் புயல் .காற்றாலையில் தேவைக்கு பயன்பட்டால் அது பயன்படுத்தப்படும் விதத்தில் தான் எல்லாமே உள்ளது.எனவே காற்றால் நிரம்பிய ஆகாயத்தையும் ஒரு சக்தியாக பாவித்து அதில் ஊடுருவும் பயிற்சியை பல புத்த பிட்சுக்கள் பெற்றிருந்தனர்.

கண்ணாடியை ஒரு தடையாகக் கருதாமல் ஒளியானது ஊடுருவுகிறார் போல் ஆகாயத்தை தங்கள் சரீரத்தால் ஊடுருவினார்கள்.

இதைப் பற்றி பல பௌத்த துறவிகளின் நூல்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றன

You may also like...

Leave a Reply