அஷ்டமா சித்து

Advertisements

இந்த உலகில் திடப்பொருள் என்று நாம் கருதும் எந்த ஒன்றின் உள்ளும் ஊடுருவும் ஆற்றல் அனிதாவிற்கு உண்டு.

ஒரு திரைச்சீலை மறைத்துக் கொண்டிருக்கிறது அதன் அருகில் சென்று உற்று பார்த்தால் அதன் மிகச் சிறிய துவாரங்கள் வழியாக அதன் பின்புறம் தெரியும் .

இது போன்ற துவாரங்கள் அனைத்திலும் உண்டு. அந்த துவாரங்கள் வழியே புகுந்து வெளியேறுதல் தான் அணிமா சித்தி.

இதனாலேயே பல சித்த புருஷர்கள் பூட்டிய அறைகளைக் கடந்து வெளியே சென்று வந்தனர்.

இவர்கள் பஞ்சபூதங்களால் ஆன தங்கள் பௌதீக உடலை காற்றில் மிதக்கும் தூ்சாக ஆக்கி துளைகளை ஊடுருவுவார்கள்
ஒரு விதத்தில் இந்த உலகமே பஞ்சபூதக் கலவை தான். இத்தகைய ஊடுருவல் களில் அந்த கலவையோடு இவர்கள் கலந்து விடுவர்.

இந்த வகையில் பார்த்தால் இந்த உலகில் ஒரு துண்டு பகுதி தான் நாம் .நாம் வேறு இந்தப் பிரபஞ்ச உலகம் வேறு இல்லை.

உலகம் வேறு…உடல் வேறு…. மனம் வேறு… என்பதெல்லாம் அறியாமை. அதனாலேயே நமது ஆற்றல் குறைந்து மனிதசக்தி ஒரு எல்லைக்குள் கட்டுப்பட்டது என்ற எண்ணமும் வருகிறது .உண்மை அதுவல்ல எரித்து சாம்பலாக்கப்பட்ட ஒரு பிரேத சாம்பலுக்குள் மீண்டும் உடலை உருவாக்கிய மகா புருஷர்கள் இந்த உலகில் இருந்திருக்கிறார்கள்.

அணிமா வசப்பட்டு விட்டால் நாம் வேறு ,உலகம் வேறு இல்லை. நம்மை நேரம் காலம் இடம் என்கிற எதுவும் ஒன்றும் செய்யாது.சித்திகளில் ஔஷத சித்தி என்றும் ஒன்று உண்டு. ஔஷதம் என்றால் மருந்து .அதை இந்த உலகத்திற்கு தருவதும் பஞ்சபூதங்களே. ஒரு மூலிகைச் செடியின் விதை மண்ணுக்குள் புதைக்கப்பட்டு மூடப்பட்ட நொடி பஞ்சபூத வினைகள் ஆரம்பமாகி விடுகின்றன .

அந்த விதை நீரை உண்டு இதர சக்திகளையும் உண்டு தன்னுள் அடங்கியிருக்கும் அணுக்களில் பெருக்கம் கொள்கிறது.

இந்த பெருக்கத்தால் தான் அது மூடிய மண்ணை மீறிக் கொண்டு வெளியே வருகிறது. ஆகாயத்தில் காற்றும் சூரிய கதிர்களும் இருந்து அந்த மூலிகைச் செடியின் தண்டுகளை மேலும் பருமனாகின்றன.

இப்படிச் சொல்வது மனித மனங்களுக்கு எளிதாக புரிவதற்காகவே. உண்மையில் விதை இனப்பெருக்கம் என்பது பஞ்ச பூதங்களில் இறைந்து கிடக்கும் சக்திகள் ஒன்று படுவதைத்தான் குறிக்கிறது.

இவ்வாறு ஒன்றுபட குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது .மூலிகைச் செடிகளும் கண்களுக்கு ஏற்ற மற்ற அணுத்திரளுக்கு ஏற்ற மற்ற அணுக்களை உட்கொண்டு பெருகி காய் கனி என்று உலகிற்கு வழங்குகிறது .

இவைகளில் சிலவற்றை உட்கொண்டு நாம் கண்ணாடியை கூட கடித்து விழுங்கலாம் ,நாவிற்கோ வாயின் உள் பாகங்களோ நசியவே நசியாது.

இன்னும் சில மூலிகைகள் உடம்பின் பஞ்சபூத சேர்க்கையால் ஒவ்வொரு நொடியும் நிகழும் உடம்பின் பெருக்கத்தை அல்லது மாற்றத்தை அப்படியே தடுத்து நிறுத்திவிடுமாம்.

இதனால் இதை உட்கொள்ளும் போது உடலானது எந்த வயதில் எந்த நிலையில் இருந்ததோ அந்த வயதில் அந்த நிலை அப்படியே நீடிக்கும்.

இதனால் முதுமை என்னும் மாற்றத்தை தவிர்க்கலாம்.

இதை இப்படியும் சொல்லலாம் .அந்த உடம்பை பொருத்து காலம் நின்றுவிடும். செயல்படாது .

பிரபஞ்சவெளியில் காலம் நின்றுவிட்ட இருண்ட பாகங்கள் (ப்ளாக் ஹோல்ஸ்) இருக்கின்றன.

உண்மையில் காலம் என்பது என்ன? பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள அன்றாடம் எடுத்துக்கொள்ளும் 24 மணி நேரம் என்கிற அளவு தானே காலம்.

பூமிக்கு வெளியே ஆகாயத்தில் சூரிய சந்திரர்களின் ஒளி படாத ஒரு இடத்தில் உண்மையில் என்ன இருக்கிறது .அங்கே எதை வைத்து காலம் என்று ஒன்று இருப்பதை உணரமுடியும.் சிந்தித்துப் பாருங்கள் .

நமது உடலிலும் பஞ்சபூத வினைகள் நிகழாமல் நாமும் இந்த மாற்றங்களுக்கு ஆளாகாமல் அப்படியே நின்று விட எந்த இயக்கமும் இல்லாத ஒரு இடத்தில் காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகிறது அல்லவா? என்றால் அனைத்தையும் உணர்வது என்பது மனது தானே.

இந்த மனம் தானே. கால தேச வர்த்தமானங்களைக் கவனிக்கிறது. அதை கூட்டுவதும் கழிப்பதும் மனது தானே.

காலத்தோடு சேர்ந்து பயணிக்கும் நாம் அதன் வேகத்தை கண்டறிந்து அதை விட பலமடங்கு பின் நோக்கிப் பயணித்தால் நாம் இழந்த நாட்களுக் குள் நுழைந்து விட முடியும் அல்லவா.?You may also like...

Leave a Reply