அஷ்டமா சித்து-11

Advertisements

காலம் என்பது உணர்வதில் தான் இருக்கிறது நினைத்த மாத்திரத்தில் 10 ஆண்டு பின்னோக்கிப் போய் அப்போது நடந்த ஒரு சம்பவத்தில் திளைக்க மனதால் முடிகிறது. பின்னோக்கும ்இந்த சக்தியால் முன்னோக்கவும் முடியும்.

இப்படி முன்னோக்கி நினைப்பதை கற்பனை செய்து பார்ப்பது என்று வழக்கத்தில் கூறினாலும் அது தான் காலத்தை வெல்வதற்கான ஒரு ஆரம்பம்.

மனதால் உடம்பை ஆட்சி செய்யலாம் செய்யவும் வேண்டும். நினைவே செயல் ஆகிறது.

அது செயலாவது என்பது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் கால நேரங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது .

ஒன்றைப் பற்றி நினைக்கும் போதே அதற்கான விதை உள்ளே விழுந்து விரிவடைய தொடங்கிவிடுகிறது.

ஒருவகையில் மனமும் பிரபஞ்சமும் ஒன்றே என்கிற புரிதல் ஒரு கட்டத்தில் நிகழும் .பிரபஞ்சம் என்பது ஒரு நிலமாக மலைகாடாக மனித வசிப்பிடமாக நமக்கு உணர்த்துவது எல்லாம் இந்த இடமும் காலமும் தான்.

இதை நீக்கிக் கொண்டு பார்த்தால் உண்மை தெரியும்.அந்த உண்மைக்குள் இடம் காலம் எல்லாவற்றையும் நாமே வகுப்பது என்பதும் புரியும்.

நாம்தான் இடம் காலம் இரண்டையும் உருவாக்குகிறோம் என்றால் அதை ஆட்டிப் படைப்பதும் நமக்குசுலபமாகிவிடும.

அஷ்டமா சித்திகளை அடைய நினைப்பவர்களுக்கு இந்த இடமும் காலமும் ஐயம் திரிபற புரிய வேண்டும்.

அனிமா மகிமா இலகிமா கரிமா எந்த ஆற்றலாக இருந்தாலும் அதை புரிந்து கொள்வதும் செயல்படுத்துவதும் மனதுதான்.

ஆனால் இந்த மனதோ உடம்பிடம் மடங்கிக் கிடக்கிறது. அதிலிருந்து மீண்டு உடம்பை ஆள முடிந்தவர்களே அஷ்டமா சித்தியை வசப்படுத்த முடியும்You may also like...

Leave a Reply