அஷ்டமா சித்து-12

Advertisements

ஒரே ஒரு ஏக்கரில் ஒருதோட்டம். முதலில் ஒரு பக்கம் ரோஜாவும் ஒரு பக்கம் மல்லிகையும் ஒரு பக்கம் பாகற்காயும் ஒரு பக்கம் சர்க்கரை வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் பயிர் செய்தார் ஒருவர்.

எல்லாமே நன்கு விளைந்து செழித்து நின்றன .முதலில் கட்டாந்தரையாக இருந்தது. தோண்டியபோது அன்றும் சரி இன்றும் சரி கல்லும் மண்ணும்தான் வருகிறது .ஆனால் விதைகளை போடவும் அந்த விதைகள் அந்த பூமிக்குள் இருந்து ரோஜா மல்லி பாகற்காய் ,சர்க்கரை வள்ளிக்கிழங்கு மா வாழை என்று சகலத்தையும் விருவிருவென்று உருவாக்கி கொட்டி குவித்து விட்டது.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம் ஒவ்வொரு வண்ணம் ஒவ்வொரு சுவை .எதுவும் யாராலும் ஆகாயத்திலிருந்து போடப்படவில்லை .

பூமிக்குள் இருந்து தான் வந்தது. ஆனால் நேரடியாக தோண்டிப் பார்த்தால் கல்லும் மண்ணும்தான் வருகிறது. இது என்ன மாயம்? இது எப்படி சாத்தியம்? அற்புதம் இல்லையா?

இந்த பூக்கள் இந்தக் கனிகள் எங்கே இருந்தன. எப்படி வந்தன. அவை வருவதற்கு சில காலம் தேவைப்பட்டது .அந்தக் காலம் என்பது எது ?ஒரு ரோஜா விதை பூத்து பூவை தர ஒரு மாதம் ஆயிற்று.

அதாவது 30 நாள் அதாவது 720 மணி நேரம். அதாவது 43, 200 ஒரு நிமிடம் .25 லட்சத்து 92000 நொடிகள்.

ஒரு மையப்புள்ளி அளவு விதை ஒரு சதுர அடி நிலம் 25 லட்சத்து 92 ஆயிரம் நொடிகள் இருந்தால் ஒன்றுக்குப் பத்தாக ரோஜாப்பூக்கள் தயார் .

இந்த 25 லட்சத்து 92 ஆயிரம் நொடியில் அந்த ரோஜா எங்கிருந்து எப்படி வந்தது ?அது அதற்கு முன் எங்கே இருந்தது .அனிமா மகிமா பற்றி சிந்திப்பவர்கள் இப்படி கேட்டுக்கொண்டு யோசித்தால் முதலில் குழப்பமாக இருந்தாலும் மிக நிதானமாக தெளிவோடு யோசிக்க யோசிக்க விடை கிடைக்கும் .

ரோஜா என்று ஒன்று ஒரு முழு பூவாக உடனே உருவாகி வந்துவிடவில்லை. அது காம்பு மொட்டு என்று ஒவ்வொரு மணித் துளிகளில் வளர்ந்துதான் முழுபூவானது. அப்படி வளர அது தனக்குத் தேவையானதை வெட்ட வெளியில் திரியும் காற்றிடம் இருந்தும் ஒளியிடம் இருந்தும் நீரிடம் இருந்தும் தான் பெற்றிருக்க வேண்டும் .

அப்படியானால் வெட்டவெளி காற்றில் அதன் ஒளியில் அல்லது இருளில் நீரில் தான் அந்தப் பூவின் அனைத்து பாகங்களும் இருக்கிறது என்பதும் அதை ஒன்றுதிரட்ட தான் அதற்கு 25 லட்சத்து 90 ஆயிரம் நொடி தேவைப்படுகிறது என்பதும் புரிகிறது அல்லவா .

பூ மட்டுமா? உலகில் உள்ள அனைத்தும் இப்படி வெளியாகிய காற்றில் ஒளியில் நீரில் என்ற பஞ்ச பூதங்கள் இடம் இருந்தே பெறப்படுகின்றன .

மனித உடலும் அதன் திசுக்களும் கூடத்தான். இந்த பஞ்ச பூதத்திடம் இல்லாதது இல்லை .

சர்க்கரை சம்பங்கி புகையிலை என்று எல்லாமே அதனிடம் தான் கொட்டிக் கிடக்கிறது .

அதை முறையாக பெற விதை என்றும் நிலமென்றும் நேரம் என்றும் ஒன்று வேண்டும் .

இந்த மூன்றும் இருந்தால் எது தேவையோ அது தயார். இந்த மூன்றோடும் தான் உலகம் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து உயிர்களோடு சுழன்று வருகிறது.

நேற்றும் இதே தான் நிலை நாளையும் இதுதான் நிலை. இந்த மூன்றை உங்களால் ஆட்டி வைக்க முடியுமா? முடிந்தால் நீங்கள் அஷ்டமா சித்தியில் அடிப்படையான பால பாடத்தை கற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்.You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com