அஷ்டமா சித்து-13

Advertisements

எந்த சித்த சக்தியாக இருந்தாலும் மனதில் இருந்து மீண்டு உடம்பை ஆள முடிந்தவர்களே அஷ்டமா சித்தியை வசப்படுத்த முடியும்.

ஒன்று என்பது இரண்டு என்று ஒரு தத்துவம் உண்டு. அதாவது எந்த ஒரு விஷயத்திற்கும் இரு பக்கம் இருக்கும் .இதையே அப்படி கூறுவார்கள் .

மனிதன் ஒருவன் ஆனாலும் உடல் ஆன்மா என்கிற இரண்டின் சேர்க்கைதான் மனிதன்.

ஆன்மா விதை என்றால் அதன் பஞ்சபூத சேர்க்கையே உடல். ஆன்மாவே மனமாய் செயலாற்றுகிறது. இதை உணர்ந்து உடலை பிரித்துக் கொள்ளுதல் வேண்டும் .

உடலாகிய பிண்டம் புரிந்தால் அண்டம் புரியும். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது என்பதும் புரியும் .

மனம் நினைப்பதையே செயல்படுத்தும் .நினைக்கும் எதையும் செயல்படுத்தும்.

சில செயல்கள் காலத்தால் நிகழும். சில உடனடியாக நிகழும். துரிதமும் தாமதமும் மனதின் வேகத்தை பொருத்தது .வேகம் என்பது காலம் சார்ந்தது காலத்தை கட்டி ஆள்பவர்களால் எதையும் சாதிக்க முடியும்.

உலகில் காலத்தை வென்ற விஷயங்கள் இரண்டு தான் என்பார்கள் .ஒன்று ஒளி அடுத்தது மனம் .மனமானது ஒளியை விட வேகமானது .நினைத்த மாத்திரத்தில் நாம் இந்திரலோகத்தில் இருப்பதாக கூட கற்பனை செய்துகொள்ள முடியும்.

இதோடு போட்டி போடக் கூடியது ஒளிதான் .இந்த ஒளியைத்தான் சூரியனாக காண்கிறோம்.

சூரியனில் இருந்து உதிர்ந்து விழுந்த ஒரு பிண்டம் தான் பூமி. இந்த பூமி பஞ்ச பூதங்களால் ஆனது. பூமியைப் பற்றி நினைக்கும் போதே வியப்பாக இருக்கும்.

ஆட்டின் உடலில் இருந்து வெட்டி எடுத்த மாமிசமானது உயிரோட்டமின்றி கசாப்புக் கடையில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

அதை அப்படியே விட்டால் காற்றோடு கூடி வினைக்குள்ளாகி அதில் கண்ணுக்குத் தெரியும் விதமாய் புழுக்களும் கண்ணுக்கு காணமுடியாத வகையில் நுண்ணுயிர்களும் (பாக்டீரியா) தோன்றி அதிலிருந்து ஏராளமான உயிர் செல்கள் உருவாகும் .

இந்த உயிர் செல்கள் ஆடு உயிரோடு இயக்கத்தில் இருந்த சமயத்தில் ஆட்டின் உடல் பாகம் என்ற பெயரில் வேறு விதமாக இருந்திருக்கும்.

அந்த ஆட்டின் உடல் உயிரோடு இருக்கும்போது ஒரு விதமாகவும் உயிரோட்டம் அறுபட்டு மாமிசமான பிறகு வேறு விதமாகவும் உயிர் செல்கள் உருவாகும் விந்தையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பூமியும் இப்படித்தான் பூமி சூரியன் என்னும் ஆற்றில் இருந்து பெயர்ந்து விழுந்த ஒரு மாமிசத் துண்டு இதில் புழு பூச்சிகள் ஆக உருவானதுதான் மனித இனம்.You may also like...

Leave a Reply