தவம் அனைவருக்கும் பொது

Advertisements

எய்யா!”கெட்டவர்கள் எல்லாம் கை தூக்குங்க!”அட!ஒருவர் கூட கையை தூக்கவில்லையே….?!சரி…”நல்லவர்களெல்லாம் கை தூக்குங்க”!அட!இதுக்கும் ஒருவர் கூட கை தூக்கவில்லையே….?!

ஆக இதன் மூலம் உலகத்தில் நல்லவர் கெட்டவர் என்று யாரும் இல்லை என்பது சந்தேகமற நிரூபணமாகிறது!

கூட்டத்தில் நாம் போயி, “இங்கே டாக்டரெல்லாம் கை தூக்குங்க” என்றால் டாக்டர்கள் அங்கே எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரும் கை தூக்கத்தானே செய்கிறார்கள்!

எனவே நண்பர்களே,

கெட்டவர்கள் எல்லாம் முதலில் நல்லவர்கள் ஆனால்தான் தவம் இருக்க வேண்டும். அப்போதுதான் தவம் பலிக்கும் என்று கூறப்படுவதை உதாசீனம் செய்யுங்கள்!

சோடாவை யார் குடித்தாலும் ஏப்பம் வருவதைப் போல,சயனைடை யார் தின்றாலும் மரணம் வருவதைப் போல,ஊருக்கு போற பஸ்ஸில் யார் ஏறினாலும் ஊர் போய் சேர்வதைப் போல,சொரியல் யாருக்கு ஏற்பட்டாலும் எல்லோருக்கும் சொரிய வாய்ப்பு இருப்பதைப் போல,தவமும் அனைவருக்கும் பொதுவானது.

நல்லவர்-கெட்டவர் என்று யாரும் இங்கு இல்லை!வாருங்கள் அனைவரும்.எந்த குற்ற மனப்பான்மையையும் தூக்கி எறிந்து விடுங்கள்!இறைவன் பொதுவானவர்!

தவத்தில் அவரைக் காண அனைவருக்குமே பிறக்கும் போதே அவர் லைசென்ஸ் தந்தே அனுப்பி இருக்கிறார்! கடவுள் பரிசுத்தமானவர்!

அதனால், அவரில் இருந்து தோன்றிய நாம் அனைவருமே அதே பரிசுத்தம்தான். தங்கக் கட்டியிலிருந்து தோன்றிய தங்க நகைகளெல்லாம்
தங்கம் தானே!!

You may also like...

Leave a Reply