ஓஷோவின் முற்பிறவி (2)

Advertisements

கிருஷ்ணாவின் முற்பிறவி, கிருஷ்ணாவாகப் பிறப்பதற்கு முன் சுமார் 2000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. ஆகவே, கிருஷ்ணா வெளியிட்ட பழைய ஞானம் பெற்ற ரிஷிகளின் பெயர்கள் மிகவும் தொன்மையானது. அவைகளைச் சரித்திரப் பூர்வமாகக்கூட ஞாபகப்படுத்திப் பார்க்க முடியாது.

என்னைப் பொருத்தவரையில், 700 வருடம் என்பது ஒரு நீண்ட இடைவெளிதான். ஆனால், ஒருவர் உடலால் கட்டுப்படுத்தப்படாது இருக்கும் பொழுது, ஒரு விநாடியும், 700 வருடமும் ஒன்றுதான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.

உடல் இருந்தால் தான், கால அளவுக்கு மதிப்பு உண்டு. உடலுக்கு அப்பால், 700 வருடத்திற்கும் 7000 வருடத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. உடலை எடுத்த பிறகுதான், இந்த வித்தியாசங்கள் ஏற்படுன்றன.

முற்பிறவியில் நடந்த இறப்பிற்கும், இந்தப் பிறவியில் ஏற்பட்ட இறப்பிற்கும் இடையில் ஏற்பட்ட கால அளவைக் கணக்கிடும் முறை மிகவும் சுவாரசியமானது. என்னையே எடுத்துக்கொண்டால், நான் 700 வருடங்களாக இங்கு இல்லை என்பதை எப்படி நான் அறிந்துகொண்டேன்? இதை நேரடியாகக் கணக்கிடுவது என்பது மிகவும் சிரமமான காரியம். ஆனால், இந்த கால இடைவெளியில் எத்தனை மக்கள் மறுபிறவி எடுத்திருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு, என் பிறவியின் காலகட்டத்தைக் கணக்கிட முடியும்.

உதாரணமாக, எனக்கு ஒருவரை 700 வடருங்களுக்கு முன் தெரிந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த 700 வருட இடைவெளியில், அவர் 10 பிறவிகளை எடுத்திருக்கலாம். இருந்தும், அவரிடம் அந்த 10 பிறவிகளின் ஞாபகம் அவரது அடிமனத்தில் இருந்து கொண்டே இருக்கும். அந்த ஞாபகத்தை, நான் கண்டுபிடித்து, நான் எத்தனை வருடங்களுக்கு முன்பு, உடலில் இருந்தேன் என்பதைக் கணக்கிடமுடியும்.

தொடரும்…

You may also like...

Leave a Reply