செக்ஸ் சாமியார்- ஓஷோ

Advertisements

தந்த்ரா, கலவியின் வாயிலாக தியானத்தின் அனுபவத்தை, ஞான நிலையை நாட முயற்சிக்கும் ஒரு பயிற்சி முறை. கலவியில் ஒரு கணமேனும் உங்கள் தன்முனைப்பு (egotism) அழிந்து போனால் அதுவே பெரிய விஷயம்.

தன் முனைப்பு அழிந்து விடும்போது கலவி களைப்பாகவோ, அலுப்பு தருவதாகவோ, உங்கள் ஆற்றலை உறிஞ்சுவதாகவோ இருப்பதில்லை. மாறாக உங்களை அது மேலும் ஆற்றலை உங்களுக்குத் தருகிறது. செறிவூட்டுகிறது. உயிர்த்தன்மையுடன் வைக்கிறது.

பிற்காலத்தில் வந்த அரசர்களால் தாந்திரீகர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். வட இந்தியா முழுவதும் இருந்த இது போன்ற கோயில்கள் அழிக்கப்பட்டன. தந்த்ராவின் பெயரால் கட்டற்ற உடலுறவு வளர்ந்து விடும் என்று ஆட்சியாளர்கள் அஞ்சியதே இதற்குக் காரணம்.

சில கோயில்கள் இந்துக் கோயில்களாக அப்படியே மாற்றப்பட்டன. (தந்த்ரா கோயில்களில் உள்ளே எந்த தெய்வச்சிலையும் இருப்பதில்லை). சில கோயில்கள் அடியோடு அழிக்கப்பட்டன. சில மாற்றி அமைக்கப்பட்டன. தாந்திரீகர்கள் அண்டை நாடுகளுக்கு துரத்தப் பட்டார்கள்.

தொடரும்

You may also like...

Leave a Reply