செக்ஸ் சாமியார்- ஓஷோ

Advertisements

நான் என் இளமைக்காலத்தின் பெரும்பாலான நாட்களை இந்தக் கோயிலில் கழித்திருக்கிறேன். தியானம் செய்திருக்கிறேன். கோயிலின் செக்யூரிட்டிக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே சென்றிருக்கிறேன். ‘ரஜனீஷை காணவில்லையா, கஜுராஹோவில் இருப்பான், போய்ப் பாருங்கள்’ என்று சொல்லும் அளவு.

இந்தக் கோயிலின் தியானம் எனக்கு பல்வேறு வாசல்களைத் திறந்து விட்டது. இந்தக் கோயில்களில் நீங்கள் முக்கியமான ஒன்றை கவனிக்கலாம். வெளியே இருக்கும் சிற்பங்கள் உள்ளே இருக்காது. உள்ளே எந்த தெய்வ சிலையும் இருக்காது. உள்ளே வெற்றிடம் மட்டுமே இருக்கும். வெளியே இருக்கும் கொண்டாட்டமும், ஆரவாரமும், கேளிக்கைகளும் உள்ளே அப்படியே மடைமாற்றம் செய்யப்பட்டு மாறிப் போய் இருக்கும். இது நமக்கு சொல்வது ‘வெளியே நின்றுவிடாதே, உடலோடு நின்று விடாதே, கலவியோடு திருப்தி அடைந்து விடாதே, முன்னேறிச் செல், உள் நோக்கிச் செல், அங்கே இறைத்தனமை உனக்காக காத்திருக்கிறது’ என்பது.

உண்மையில் நீங்கள் உடலின் தேவைகளை சரிவரப் பூர்த்தி செய்யவில்லை என்றால் காமத்தை நீங்கள் கடந்து போக முடியாது. உங்களுக்கு எத்தனை வயதானாலும் அது உங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்போது தான் நீங்கள் கோயிலுக்குள் நுழைய முடியும். இல்லையெனில் உங்கள் விருப்பம் முழுவதும் வெளியிலேயே, சிற்பங்களின் மேலேயே இருக்கும். கடந்து போவதே அழகானது. கஜுராஹோவின் ஒவ்வொரு சிற்பமும் நமக்கு இதைத்தான் சொல்கிறது: “கடந்து போ”

முற்றும்.

You may also like...

Leave a Reply