படைப்பாற்றல் -ஓஷோ

படைப்பாற்றல் தான் உனது சக்திகளை உருமாற்றம் செய்வதற்கான எனது செய்திஎனது திறவுகோல்
எனது தங்கத் திறவு கோல்
மேலும் மேலும் படைப்பாற்றலோடு இரு
கொஞ்சம் கொஞ்சமாக ஒரு உருமாற்றம் தானாகவே நிகழ்வதை நீ காண்பாய்
உனது மனம் மறைந்து விடும்
உனது உடல் முற்றிலும் வேறுபட்ட உணர்வை பெற்று விடும்
மேலும நீ தனியானவன் நீ ஒரு தூய சாட்சி என்கிற இடை விடாத உணர்வுடன் நீ இருப்பாய்
மேலும் அந்த தூய சாட்சி தான் தூய ஆசை
அதைத் தவிர வேறு எதுவும் அல்ல
நான் ஆசைக்கு எதிரானவன் அல்ல
நான் ஆசைகளை எல்லாம் ஆதரிப்பவன்
ஆனால் பொருட்கள் மீதான ஆசைகளைப் பற்றிக் கூறவில்லை
பொருட்கள் மறைந்து போகட்டும்
அப்போது புகையில்லாத் தீச்சுடர் போன்ற ஆசையை நீ பெற்றிருப்பாய்
அது மாபெரும் விடுதலையைக் கொண்டு வந்து விடும்