இதயம் -ஓஷோ

Advertisements


இதுதான் நாம் வாழ வேண்டிய இடம்.
மனிதனின் இருப்பிடம்! நமது இருப்பிற்குச் செல்ல பிரபஞ்சவுணர்வோடு நம்மை சேர்க்கக் கூடிய இடம். அதுதான் நமது எஜமானனாக இருக்க வேண்டும். இதயத்துக்கு உடலும் மனமும் உண்மையுள்ள வேலைக்காரனாக உதவ வேண்டும். இதயம் அன்பு வழி! இதயத்தின் மொழி அன்பு! இதயம் அன்பு மயமானது! அகங்காரமற்றது! தவறுகளை மன்னிப்பது! காயங்களை குணப்படுத்துவது! சுமையற்றது! பறக்கவும், பரவவும், விரியவும், வல்லமை
கொண்டது. உணர்வின் ஆட்சி இங்கு! இதிலிருந்து பிறக்கும் எதுவும் பூமியை வளமாக்கும். அழகாக்கும். மெருகேற்றும்! திட்டமிட்டு கொலை செய்யும் யுத்தமும் அரசியலும் இங்கு
இல்லை. தவறு கண்டு தட்டிக் கேட்பதும், கொடுமை கண்டு கொந்தளிப்பதும் கூட இதுதான்! இது உணர்வுக் கடல். மேலே ஏற்படும் கொந்தளிப்புகள் சிறிது நேரமே இருக்கும். பிறகு மாறிப் போகும். உள்ளே ஆழத்தில் அமைதியும் சாந்தமும் தாய்மையும் எப்போதுமிருக்கும். இது மனிதனின் சாத்தியம்….
நாம் பிறப்பது இங்குதான்! மனம் எஜமானனாவதில்தான் நம் வாழ்வு தடம் புரள்கிறது. ஆகவே இதயம் திறந்து வாழுங்கள். அதற்காக இழப்பதெல்லாம் மதிப்பற்றவையே! வாழ்ந்து பெறப்போவது இருப்புநிலை. சமயம் வாய்க்கும்தெல்லாம் இதயம் திறக்க கற்றுக் கொள்வதிலிருந்து தியானத்தை ஆரம்பியுங்கள்

– ஓஷோ

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com