ஓஷோவாகிய நான்

என்னைப் பற்றி ஒரு போதும் கடந்த காலத்தில் (past tense) பேச வேண்டாம்.என்னை ஒரு தத்துவ வாதியாக நினைவு கூர வேண்டாம்.என்னை ஒரு கவிஞனாக நினைவு கூருங்கள்.
நான் என் கவிதையை வார்த்தைகளில் எழுத வில்லை.நான் என் கவிதையை உயிருள்ள ஊடகமான உங்களில் எழுதுகிறேன்.அதைத் தான் இந்த முழு இருப்பும் (whole existence) செய்து கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு வார்த்தையை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்அது தான் கருணை.உங்களிடம் கருணையோடு இருங்கள்.இன்னும் தன் இருப்பின் மையத்தைப் புரிந்து கொள் ளாதவர்களிடம் கருணையோடு இருங்கள்.
இன்னும் தன்னை விட்டு தூரமாக இருப்பவர்களிடம்
கருணையோடு இருங்கள்.இன்னும் சொந்த வீடு வந்து சேராதவர்களிடம்
கருணையோடு இருங்கள்.
கடந்த காலம் என்னைப் புரிந்து கொள்ள வில்லை.எதிர் காலம் என்னைப் புரிந்து கொள்ளும்.என் கனவுகளை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.