நீங்கள் முழு பேரின்பத்தோடு இருப்பீர்கள்-ஓஷோ

Advertisements

.

நீங்கள் உங்கள் வெளி புறத்திலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வின் முதல் படி உடல் தான். நினைவில் கொள்ளுங்கள். முதலில் கண்களை மூடிக்கொண்டு உடலுக்குள் செல்லுங்கள். பாதத்தில் இருந்து தலை வரை எல்லா இடங்களிலும் தேடுங்கள். எங்காவது பதற்றம் இருக்கிறதா என்று பாருங்கள். பிறகு அந்த பகுதியிடம் பேசுங்கள்.

ஒரு நண்பனிடம் பேசுவதைப் போலப் பேசுங்கள். ” எதுவுமில்லை. அதைக் கண்டு பயப் படாதே. பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன். அதனால் நீ ஓய்வு எடு என்று சொல்லுங்கள். மெல்ல மெல்ல நீங்கள் அந்த தந்திரத்தை தெரிந்து கொள்வீர்கள். பிறகு உங்கள் உடல் ஓய்வெடுக்கும்.

பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள். இன்னும் கொஞ்சம் ஆழமாக மனதை ஓய்வெடுக்க சொல்லுங்கள். உங்கள் உடல் கேட்குமென்றால் மனமும் கேட்கும். ஆனால் நீங்கள் உங்கள் மனதிலிருந்து துவக்க முடியாது. நீங்கள் ஆரம்பத்தில் இருந்து தான் துவக்க வேண்டும். நீங்கள் நடுவில் இருந்து துவக்க முடியாது.

பலர் மனதில் இருந்து துவங்குகிறார்கள். தோற்று போகிறார்கள். காரணம் அவர்கள் தவறான இடத்தில் இருந்து துவங்குகிறார்கள். எல்லாமே சரியான ஒழுங்கில் நடைபெற வேண்டும்.

நீங்கள் உங்கள் உடலை தன்னால் ஓய்வு பெறச் செய்யும் திறனைப் பெற்று விட்டால் பிறகு நீங்கள் மனதை தன்னால் ஓய்வு பெற செய்ய முடியும். மனம் அதிக சிக்கலான நிகழ்வு. உங்கள் உடல் நீங்கள் சொல்வதைக் கேட்கிறது என்கிற நம்பிக்கை உங்களுக்கு வந்து விட்டால் உங்களுக்கு உங்கள் மீதே ஒரு புதிய நம்பிக்கை ஏற்படும். இப்போது உங்கள் மனமும் நீங்கள் சொன்னதைக் கேட்கும். மனதோடு சற்று அதிக நேரம் பிடிக்கும். ஆனால் அது நடக்கும்.

உங்கள் உடலோடு சாத்தியம் என்றால் மனதோடும் சாத்தியம். பிறகு இதயத்தோடும் அது சாத்தியம் தான். நீங்கள் இந்த மூன்று படிகளையும் கடந்து விட்டால் பிறகு நான்காவதற்கு அடி எடுத்து வைக்க முடியும். இப்போது உங்கள் இருத்தலின் உள்ளார்ந்த மையத்திற்கு போக முடியும். அது உடல், மனம், இதயத்திற்கு அப்பாற் பட்டது.

உங்கள் இருத்தலின் சரியான மையத்தில் நீங்களும் ஓய்வு பெற முடியும். அந்த ஓய்வு தான் மிகச் சிறந்த சந்தோஷத்தை, உச்ச கட்டத்தை, பரவசத்தை கொண்டு வரும். நீங்கள் முழு பேரின்பத்தோடு, உற்சாகத்தோடு இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை ஒரு நடன தன்மை கொண்டதாக இருக்கும். முழு இருத்தலுமே நடனம் தான்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com