மனதை எதுவுமே திருப்தி படுத்தாது-ஓஷோ

Advertisements

மனதை எதுவுமே திருப்தி படுத்தாது. ஆசையின் நுண்ணிய இயந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய சந்தோஷத்திற்கு ஆசை ஒரு நிபந்தனை போடுகிறது. ” இந்த கார் கிடைத்தால் நான் சந்தோஷமாக இருப்பேன். இந்த பெண், இந்த வீடு”
இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?


முதலில் நீங்கள் ஒரு நிபந்தனை ஏற்படுத்துகிறீர்கள். ” இந்த பெண் கிடைக்கா விட்டால் நான் மகிழ்ச்சியாக இருக்க போவதில்லை. நான் இந்த பெண்ணுடன் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.”
இப்போது நீங்கள் அந்த பெண்ணை அடைவதற்காக எல்லா வகையிலும் முயற்சி செய்கிறீர்கள். பல கடின முயற்சிகளுக்கு பின் அவள் உங்களுக்கு கிடைத்து விட்டாள்.

ஒரு நாள் முல்லா நஸ்ருதீன் பெரும் வலியில் துடித்த படி நடந்து கொண்டிருந்தார். நான் அவரிடம் ” என்ன விஷயம் , வயிற்று வலியா, தலை வலியா, வேதனையில் இருப்பதாகத் தெரிகிறதே” என்று கேட்டேன்.
அவர் சொன்னார் ” நான் அணிந்து இருக்கும் காலணி மிக சிறியதாக இருக்கிறது.”
சரி, எதற்காக அதை அணிந்து கொண்டு இருக்கிறீர்கள்?
அணிந்து இருப்பது நாள் முழுவதும் நரக வேதனை தான். ஆனால் மாலையில் கழற்றும் போது அது சொர்க்கமாக இருக்கிறது.
அதைத் தான் நீங்கள் செய்கிறீர்கள்.

இப்போது இந்த பெண் பயனற்றவள். காரணம் அவள் உங்களுக்கு கிடைத்து விட்டாள். இப்போது நீங்கள் வேறு யாருடைய பெண்ணையாவது பார்க்க துவங்குகிறீர்கள்.

சந்தோஷம் என்பது இங்கிருக்கிறது. அதற்கு எந்த நிபந்தனையும் தேவையில்லை. சந்தோஷம் என்பது இயற்கையானது. அதை அப்படியே பாருங்கள். உங்கள் சந்தோஷத்தின் மீது எந்த நிபந்தனையும் விதிக்காதீர்கள். எந்தக் காரணமும் இன்றி சந்தோஷமாக இருங்கள். சந்தோஷமாக இருக்க காரணங்களைக் கண்டு பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. வெறுமே சந்தோஷமாக இருங்கள்.

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com