விழிப்புணர்வு தவிர வேறு எதுவுமே தேவையில்லை

Advertisements

விழிப்புணர்வு மேலே வளரும்போது மனம் கீழே சிறியதாகிக் கொண்டே போகிறது. அதே விகிதாசாரத்தில் விழிப்புணர்வு ஐம்பது சதவிகிதம் என்றால் மனமும் ஐம்பது சதவிகிதம் துண்டிக்கப் படும். விழிப்புணர்வு எழுபது சதவிகிதம் என்றால் இப்போது முப்பது சதவிகித மனம் தான் இருக்கிறது. விழிப்புணர்வு நூறு சதவிகிதம் என்கிற நிலை வரும்போது அங்கே மனதைக் கண்டு பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

அதனால் கிழக்கு முழுவதிலும் மனமற்ற நிலையைக் கண்டு பிடிக்கிற அணுகு முறையாகவே இருந்தது. அதாவது அந்த மௌனத்தை, அந்த தூய்மையை, அந்த தெளிவை. பிறகு மனதிற்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை. அதன் வேர்கள் அப்படியே ஆவியாகி விட்டன. இலைகள் மீதிருக்கும் பனித்துளியை காலை சூரியன் எடுத்துக் கொள்வதைப் போலத்தான் இதுவும். எந்த வித தடயமும் இருக்காது. அதனால் நான் உங்களுக்கு சொல்கிறேன். விழிப்புணர்வு என்பது போதுமென்ற அளவுக்கு அதிகமாக உங்களுக்கு தேவை. உங்களுக்கு இதைத் தவிர வேறு எதுவுமே தேவையில்லை

You may also like...

Leave a Reply