கோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(4)

Advertisements

1. பல ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களின் வருகை குறைவாக இருப்பதை பயன்படுத்தி ஐந்து முதல் ஆறு பேரை மட்டும் வைத்து கூட்டத்தை நடத்தி வருகைப்பதிவேட்டில் கையெழுத்து வாங்கி கூட்டத்தை முடித்துவிடுகிறார்கள். இதனால் கசோலை மூலம் பஞ்சாயத்து தலைவர்கள் அடிக்கும் களவாணி தனத்தை கண்டுபிடிக்க முடியாமலே போகிறது. ஆகவே கிராம சபைக்கூட்டத்தில் முடிந்தவரை பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்று ஊராட்சி தலைவரிடம் கணக்கு கேட்க வேண்டும்.

2. கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க பஞ்சாயத்து தலைவர்கள் பல குறுக்கு வழிகளை கையாளுவார்கள். குறிப்பாக கிராம சபை கூட்டம் தொடர்பான தேதியை பொதுமக்களுக்கு கூறாமல் இருப்பது போன்றவை. ஆகவே கிராம சபை கூட்டம் தொடர்பான தேதியை அனைவருக்கும் சொல்லி பொதுமக்களை கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

3. இன்னும் சில கிராம ஊராட்சிகளில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது போல 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்க்கும் எழுத படிக்க தெரியாத முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு விவரம் ஏதும் சொல்லாமல் தலைக்கு 20 ரூபாய் என பிச்சை காசுக்களை கொடுத்து கிராம சபைக்கூட்டத்திற்கான பொதுமக்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்து வாங்கி அருமையாக கணக்கை முடித்துவிடுவார்கள்.

தொடரும்..

You may also like...