இருத்தல் என்பது எல்லாம் சேர்ந்தது-ஓஷோ

Advertisements

உடல் ரீதியாக விஷம் தோய்ந்த எல்லாவற்றையும் தவிர்த்து விடுங்கள். மூளை ரீதியாகவும் விஷம் தோய்ந்ததை தவிர்த்து விடுங்கள். ஆனால் மன ரீதியில் விஷயங்கள் மிகவும் சிக்கலானவை. நீங்கள் ஓர் இந்து என்று நினைத்தால் உங்களுக்கு விஷம் கொடுக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு முஸ்லீம் என்று நினைத்தால் உங்களுக்கு விஷம் கொடுக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு கிறிஸ்தவர், ஜெயின், புத்த பிட்சு என்று நினைத்தால் நீங்கள் விஷம் கொடுக்கப் பட்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு மெதுவாக விஷம் கொடுக்கப் படுகிறது. உங்கள் தாயின் மூளையிலிருந்து உங்களுக்கு விஷம் கொடுக்கப் படுகிறது. ஒருவர் இந்து அல்லது முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர் என்று நினைத்தால் அவர் மனித இனத்திற்கு எதிரானவர் என்று நினைத்து கொள்ளலாம். ஒருவரை ஜெர்மானியர் அல்லது சீனாக்காரர் என்று நினைத்து கொள்வது கூட மனித இனத்திற்கு எதிரானது தான்.

உங்களுக்கு ஏதாவது புத்திசாலித்தனம் இருந்தால் உங்களை ஒரு சாதாரண மனித ஜாதியாகவே நினையுங்கள். உங்களுடைய அந்த புத்தி வளரும் போது நீங்கள் அந்த மனிதன் என்ற பெயரெச்சத்தைக் கூட விட்டு விடுவீர்கள். நீங்கள் உங்களை ஓர் இருத்தலாகவே நினைப்பீர்கள். இருத்தல் என்பது எல்லாம் சேர்ந்தது. மரங்கள், மலைகள், ஆறுகள், நட்சத்திரங்கள், பறவைகள், மிருகங்கள்

You may also like...

Leave a Reply