2019- சில சிறந்த படங்கள்(1)

Advertisements

 Anandi Gopal (2019) மராத்தி

எவனோ ஒருவன் நிர்ணயித்து விட்ட சமூகத்தையும் , கலாச்சாரத்தையும் நூல் பிடித்தார் போல பின்பற்றும் Double Minded People வாழ்ந்த அந்த காலத்தில் பெண்களின் நிலை கேள்விக்குறிதான் . ஓடி விளையாடிக்கொண்டிருக்கும் பருவத்தில் திருமணம் செய்துவிட்டு விடுவார்கள் . ஆக்கி அவித்து ஆடவரின் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் ஒரு பொருள் தான் பெண் . அப்படி ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பெண் இந்திய அளவில் முதல் மருத்துவராக பட்டம் வாங்குகிறாள் . எப்படி சாத்தியமாகி இருக்கும் .

2019 ல் வந்துள்ள பல படங்களில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கல்வி குறித்தும் பேசியதில் இந்த படமே என்னுடைய தனிப்பட்ட சிறந்த படம் . இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் குறித்தும் இந்த திரைப்படத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள் அனந்தி ஜோஷி கோபால் ராவ் பற்றிய ஒரு Biography History படம் இறுதியில் கிரெடிட்ஸ் தவற விட வேண்டாம் .

ஒவ்வொரு காட்சியிலும் நம்மை அசர வைக்கிறார்கள் . ஒளிப்பதிவு , ஆர்ட் ஒர்க் என பாராட்டத்தக்க வகையில் இருந்தது . பாடல்கள் நிச்சயம் உங்களை கவரும். ஜீ 5 ல் ஆங்கில துணை எழுத்துடன் காணக்கிடைக்கிறது அவசியம் பாருங்கள் 

You may also like...