2019- சில சிறந்த படங்கள்(2)

Advertisements

Aamis (2019) அஸ்ஸாம்

ஆமீஸ் என்றால் கறி என்று அர்த்தம் . இந்த படம் பார்ப்பதற்கு முக்கிய காரணம் அனுராக் காஷ்யப் இந்த படத்தின் விளம்பரத்திற்க்காக ஒரு வீடியோ ஒன்று வந்தது , அதற்க்கு பிறகு திரைப்படவிழாவில் படம் வென்றுள்ளது என்ற தகவலும் வந்தது . சரி இணையத்தில் வந்ததால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் . பெங்களூரில் ஒரே ஒரு ஷோ Fun மாலில் . அதுவும் அன்றே கடைசி டிக்கெட் விலையும் ரொம்ப குறைவாகத்தான் இருந்தது . என்னுடைய பார்ட் டைம் க்ளாஸ் முடிந்ததும் காண சென்றேன் . திரைப்படத்தின் முன்னோட்டம் என்னிடம் பல விதமான ஆர்வங்களை விட்டிருந்தது . சொல்லப்போனால் நான் ஒரு கதையை நினைத்துக்கொண்டு போயிருந்தேன் . இந்தியாவில் இதுபோல் ஒரு படம் சாத்தியமா என்பதே கேள்விக்குறி தான் . இருந்தும் வந்திருக்கிறது . தற்போது அதனுடைய Distribution Streaming App ( Movie Saints ) ல் காணக்கிடைக்கிறது . 99 ருபாய் கட்டி படத்தை 24 மணி நேரத்திற்குள் நீங்கள் பார்த்து கொள்ளலாம் . ஒருவேளை உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் பாதித்தொகையை அவர்கள் திருப்பி கொடுக்க தயார் . பார்க்க நீங்க தயாரா ? இந்த படத்தை பார்த்த பிறகு இயக்குனரின் அடுத்த முந்தைய படத்தை காண வேண்டும் என்று இருக்கிறேன் அதுவும் அந்த ஆப் ல் இருக்கிறது பார்க்கணும் .

You may also like...