2019-சில சிறந்த படங்கள்(3)

Advertisements

Moothon & Virus மலையாளம்

மலையாள திரைப்படங்களில் மீதுள்ள ஈர்ப்பு என்றைக்குமே குறைவதில்லை . இந்த 2 திரைப்படத்தை உருவாக்க இணைந்துள்ள டீம் அப்படி ஒரு அசரவைக்கும் டீம் . அதற்காகத்தான் பார்த்தேன் ஏமாற்றவில்லை நல்ல படங்கள் இரண்டும் . மூத்தோன் , ஒரு பெண் இயக்குனரிடம் இருந்து இப்படி ஒரு படம் என்பது உண்மையிலேயே ஆச்சரியம் தான் .

எப்படி சொல்வது இது ஒரு Mixed Film , லட்சத்தீவு மீனவலில் தொடங்கி , அண்ணனை தேடி மும்பை செல்லும் குழந்தை பற்றி பேசுகிறது , DrugSeling , HumanTrafficking , Transgender , Sex , மும்பை ரெட் லைட் Area, தெருவோர குழந்தைகள் என மும்பை நகரின் பல அழுக்கான உண்மை பக்கங்களை புரட்டிவிட்டு செல்கிறார்கள் . இதற்க்கு முன்பு வந்த பல படங்களின் Inspiration போல தோன்றினாலும் என்னை வெகுவாக கவர்ந்தது அடுத்த வாரம் அமேசான் பிரைமில் வர இருக்கிறது நண்பர்கள் அவசியம் காணவும் .

வைரஸ் திரைப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் . அந்த பிரச்னையை எப்படி கையாண்டார்கள் என்பதனை காட்டி இருப்பார்கள் . ஒரு சில இடங்களில் டாக்குமெண்டரி போன்ற உணர்வை தந்தாலும் கவனிக்கத்தக்க ஒரு திரைப்படம் , இது Prime ல் உள்ளது

You may also like...