2019-சில சிறந்த படங்கள்(4)

Advertisements

Jallikattu & Kumbalangi Nights மலையாளம்

கும்பலாங்கி திரைப்படம் பீல் குட் வகை . எனக்கு சம்திங் ஸ்பெஷல் திரைப்படம் . வருத்தம் என்னவென்றால் தற்போது அமேசான் தளத்தில் இருந்து நீக்கி விட்டார்கள் . ஜல்லிக்கட்டு திரைப்படம் பலருக்கு பலவிதமான கேள்விகளை உருவாக்கி கொடுத்திருக்கும் . வெறி , பகை , அதிகாரத்தனம் அதனால் வரும் வன்முறை , அதில் நான்தான் எப்போதுமே என நிலை நிறுத்த போடும் உந்துதல்கள் . என பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து உருவாக்கி கொடுத்த படமென்றால் அது நிச்சயம் இதுதான் .

எடுத்துக்கொண்ட கதையமைப்பும் சரி கையாளப்பட்ட விதமும் சரி மிக சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பார்கள் , இறுதி காட்சிகளில் மனித சத்தங்கள் மூலம் எழுப்பும் ஒலி அவ்வளவு அட்டகாசமாக இருந்தது . இந்த திரைப்படத்தை தற்போது நீங்கள் அமேசான் பிரைமில் காணலாம் .

You may also like...