உலக தலைவர்கள் இல்லாமல் நடத்தப்படும் முதல் ஐநா பொதுசபை கூட்டம்

Advertisements

நியூயார்க்,

ஐ.நா. பொதுசபை கூட்டம் ஆண்டுதோறும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும். ஒரு வாரத்துக்கும் மேல் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சிறப்பு மிக்க ஐ.நா. பொதுசபை அரங்கில் நின்றவாறு உலகுக்கு உரையாற்றுவார்கள்.

இதற்க்காக உலகம் முழுவதிலும் இருந்து முக்கியதலைவர்கள் வந்து நியூயார்க்கில் முகாம் இடுவார்கள். இதனால் அந்த நகரமே பரபரப்பாக காணப்படும். ஆனால் இப்போது அமேரிக்காவுக்கும் ஐநாவுக்கும் ஏற்பட்ட கருத்துமோதலால் தலைவர்கள் யாரும் இல்லாமல் நடத்தமுடிவுசெய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டுக்கான பொதுசபை கூட்டம் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. ஐ.நா.வை பொறுத்தவரை இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதொரு ஆண்டாகும். ஏனெனில் ஐ.நா. தொடங்கப்பட்ட 75-வது ஆண்டை சிறப்புடன் நடத்த  பொதுசபை கூட்டத்தை நடத்த ஐ.நா. திட்டமிட்டு இருந்தது.c

ஆனால் இந்த கொண்டாட்டத்தில் கொரோனா  பொங்கல் வைத்துவிட்டது. இந்த கொடிய அரக்கனிடம் இருந்து தப்பிக்க சமூக விலகள் கடைபிடிக்க வேண்டும் எனும் கட்டயத்தில் இருப்பதால் கூட்டங்களை தவிர்ப்பது கட்டாயமாகிற்து. சமூக இடைவெளியை பின்பற்றுவதும் முக்கியமாகும்.

எனவே இந்த ஆண்டு பொதுசபை கூட்டத்தில் தலைவர்களை நேரடியாக பங்கேற்கச்செய்ய யாமல், வீடியோ பதிவு மூலமாக பங்கேற்க ஐ.நா. முடிவு எடுத்து உள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுசபையானது நேற்று முன்தினம் இந்த முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, ‘அனைத்து உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள்  தங்கள் தலைவர், துணைத்தலைவர், பட்டத்து இளவரசர், அரசு தலைவர், மந்திரி அல்லது துணை மந்திரி போன்றோரின் உரையை முன்கூட்டியே வீடியோவாக பதிவு செய்து அனுப்பவேண்டும். இதனை  ஐ.நா.வின்    75-வது  பொது விவாதத்தின்போது, பொதுசபை அரங்கில் ஒளிபரப்ப வேண்டும். இதற்க்கு முன்னதாக அந்த நாட்டின் பிரதிநிதி தங்கள் நாட்டின் தலைவரைப்பற்றி அறிமுகம் செய்வார்.

முன்னதாக பொதுசபை அரங்கில் நேரில் கலந்து கொள்ளும் அவர்களின் பிரதிநிதி ஒருவர் தங்கள் நாட்டு தலைவரை அறிமுகம் செய்வார்  என முடிவு செய்யப்பட்டது.

ஐ.நா.வின. 75-வது ஆண்டு முக்கியதுவம் வாய்ந்த இந்த  சிறப்பு கூட்டம் செப்டம்பர் 21-ந்தேதி நடைபெறும். இந்த கூட்டத்தின் முடிவில் சிறப்பு முடிவுகள் எட்க்கப்பட்டு அதை அந்த கூட்டத்தின் இறுதியில்  வெளியிடப்படும்.

ஐ.நா.வின. 75-வது அமர்வின் பொது விவாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது.

உயிர்-பன்முகத்தன்மை மாநாடு 30-ந்தேதி நடைபெறுகிறது.

4-வது உலக மகளிர் மாநாட்டின் 25-வது ஆண்டுவிழா அக்டோபர் 1-ந்தேதி  நடைபெறுகிறது.

. இந்த கூட்டங்கள் முழுவதும் காணொளி காட்சிமூலமே நடத்தப்படும்.

எனினும் ஐ.நா.வில் கடந்த 20-ந்தேதி முதற்கட்ட மறுதிறப்பு நடந்துள்ளது. அதன்படி ஐ.நா. வின் வளாகத்துக்குள்  அதிகபட்சமாக 400 பேர் மட்டுமே அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

2-ம் கட்ட மறுதிறப்பில் குறைந்தது  40 சதவீத மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த 2 கட்ட நடவடிக்கைகளின் முடிவைப்பொறுத்தே 3-வது கட்ட மறுதிறப்பு நடைபெறும் என தெரிகிறது.

ஐ.நா.வின் சிறப்பு மிக்க 75-வது ஆண்டு பொதுசபை கூட்டத்திர்க்கு சில ஆண்டிற்க்கு முன்பு இருந்தே வெகு சிறப்பாக நடத்தப்படவேண்டும் என்று உலகதலைவர்கள எல்லாம் முடிவெடுத்து அதற்க்கான பல ஏபாடுகள் முன்னெடுத்த நிலையைல் இப்போது முக்கிய தலைவர்கள் கூட கலந்துகொள்ளமுடியாமல் நடத்தப்படுவதை பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இப்போது நிலவிவரும் உலக நாடுகளின் பனிப்போர் உலக தலைவர்கள் மத்தியில் ஓர் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் ஒன்றுபட்டு சுகமான எதிர்காலம் மலரும் என்று நம்புவோம்.

கலை செல்வன்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com