புதிய கல்விக் கொள்கை மாற்றமா இல்லை ஏமாற்றமா? – ஆர்.கே.

Advertisements

பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்சார்பு பொருளாதாரம் குறித்து பேசி வரும் சூழ்நிலையில், கஸ்து£ரி ரங்கன் கமிட்டி அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஓப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது நடைமுறையில் உள்ள கல்வி கொள்கை மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. அதன் வழியில் 5+3+3+4 என்கின்ற படிநிலையில் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. 3முதல்8 வயது வரை, 8 முத¢ல் 11 வயது வரை, 11 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாடத்திட்டங்களில் மாறுதல்கள் வருகிறது.

ஆதாவது முதல் ஐந்தாண்டு தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் அந்தந்த தாய்மொழியில் கல்வி கற்பார்கள் என்றும், அடுத்த 3 ஆண்டுகள் மும்மொழிக் கொள்கை என்ற வகையில் பாடத்திட்டத்தை மூன்று மொழிகளில் படிக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படியாக 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள். கல்லு£ரிக்குச் செல்லும் போது நுழைவு தேர்வு எழுதியே கல்லு£ரியில் இடம் பிடிக்க முடியும் என்பதும் புதிய விஷயமாக உள்ளது. அதோடு கல்லு£ரி படிப்பு நான்கு வருடங்கள் படிக்க வேண்டியிருக்கும் அப்போது மட்டுமே பட்டப்படிப்பை முடிக்க முடியும். கலைக் கல்லு£ரிகளுக்கும் இது பொருந்துகிறது.

இது கோச்சிங் சென்டர்களுக்கு வழிவகுக்குமே ஒழிய, மாணவர்களின் படிப்பை மேன்மை படுத்த உதவாது என்று கூறுகின்றனர். உலக அளவில் மேற்படிப்பு படித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அந்நிலை இக்கல்விக் கொள்கையால் மாற்றமாகும் என்கின்றனர். நுழைவு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் பட்டப்படிப்பை படிக்க முடியாத நிலை உருவாகிறது.

இதில் அனைவரும் வரவேற்கும் விஷயம் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக் கற்றல் என்பதே, அனைவரும் வரவேற்கின்றனர். அதே சமயம் சமஸ்கிரதத்தை உட்புகுத்துவதை தமிழகம் கண்டிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இருமொழிக் கொள்கைதான், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும் என்று அழுத்தமாக முதல்வர் எடப்பாடி சொல்லியுள்ளார். இது மாநில, மத்திய அரசுகளுக்கு மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.

இதைத் தவிர்த்து தொழிற்பாடங்களை இணைத்தே அனைத்து மாணவர்களும் படிப்பார்கள். ஆகையால் திறமையான தொழில் நிபுணத்துவம் வளர்ச்சியடையும் வகையில் இந்த கல்விக் கொள்கை அமைக்கப்படுகிறது என்கிறது. ஏற்கனவே தொழிற்கல்வி பாடங்கள் இருக்கின்றது. இதில் புதிதாக என்ன செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக் குறி?

கல்விக்கான நிதி ஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்படுவது மகிழ்சியளிக்கும் விஷயமாகவும், அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகூட கட்டமைவு, இலவச கல்வி போன்றவை சிறப்பான அம்சங்களாக பார்க்கப்படுகிறது. கல்வி வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாக கற்பிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மனனம் செய்யும் கல்வி போய் புரிந்து படிக்கும் கல்விக்கு மாற்றப்படுகிறது.

இக்கல்விக் கொள்கையால் 46 பிரிவுகளாக இருந்து கல்வி பிரிவுகள் கலைக்கப்பட்டு, ஒரே கல்வி கொள்கையின் கீழ் கொண்டுவரப்படுகிறது. சீரான கல்வி என்பதே இலக்கு என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கான ஆசிரியர்கள் தங்கள் தகுதிகளை எப்படி வளர்த்துக் கொள்ளவார்கள் என்பது ஒரு கேள்வியாக உள்ளது? புதிய ஆசிரியர்கள் வருவார்களா? இல்லை பழைய ஆசிரியர்கள் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்றார் போல் தங்களை தகவமைத்துக் கொள்வார்களா? என்ற கேள்வியும் உள்ளது. சமீபத்தில் தான் தமிழகத்தில் சமசீர் கல்வி கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இக்கல்விக் கொள்கையை 50 சதவீதமான விஷயங்கள் வரவேற்கப்பட வேண்டியது என்பதும், 50 சதவீதமான விஷயங்கள் விமர்சனத்துக்கு உட்பட்டது என்றும் கல்வியாளர்கள் பெரும்பாலோர் கூறுகின்றனர்.

இதில் உள்ள சாதக, பாதகங்களை சரி செய்து, ஒரு நல்ல கல்வி கொள்கை நடைமுறைக்கு வருமேயானால் அனைத்து மக்களுக்கும் அது ஏற்புடையதே.

You may also like...