வெடித்து சிதறிய பட்டாசுகள்

Advertisements

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வள்ளிமில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகே, கோவில்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர்க்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த பட்டாசு கடையானது சிறப்பு பண்டிகை காலங்களில் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும், தற்போது கொரோனோ நோய் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கடை செயல்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், இன்று மாலை (ஆகஸ்ட் 19) பட்டாசு கடையில் திடீரென விபத்து ஏற்பட்டது. பட்டாசு கடை அருகே பெட்ரோல் பங்க் இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணை்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

You may also like...