விநாயகர் சதுர்த்தி – பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்
சென்னை,
சென்னையில் திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், புதுப்பேட்டை, புளியந்தோப்பு, ஓட்டேரி உள்பட 70 இடங்கள் பிரச்சினைக்குரிய பகுதிகளாக போலீசார் கண்டறிந்துள்ளனர். அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
விநாயகர் சிலையை கரைக்கும் இடங்களான எண்ணூர், திருவொற்றியூர், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நபர் தவிர அமைப்பு ரீதியாகவோ, அதிக கூட்டம் சேர்த்து சிலைகளை கரைக்க முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.