மதுரை திருச்சி தலைநகர் பிரச்சனை அரசியலா? அல்லது அவசியமா? – ஆர்.கே.

Advertisements

சமீபத்தில் தமிழக அமைச்சர்கள் கிளப்பிய 2 ம் தலைநகர் பிரச்சனை தமிழ்நாட்டில் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. தமிழக அமைச்சர்கள் செல்லு£ர் ராஜூ மற்றும் உதயகுமார் மதுரையை தலைநகராக மாற்ற வேண்டும் என்று சொல்ல, வெல்லமண்டி நடராஜன் திருச்சியை தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று கேட்க, அதிமுகாவிலுள்ளேயே சலசலப்பு.

1983 ஆம் ஆண்டு எம்ஜியார் தலைநகரை திருச்சி மாற்றி தமிழக மக்கள் அனைவரும் விரைவில் தொடர்பு கொள்ளத்தக்க வகையில் மாற்றி அமைக்க விரும்பினார். ஆனால் பல அரசியல் காரணங்களால் அந்நிகழ்வு நடக்காமல் போனது.

மீண்டும் இப்பிரச்னை தலைது£க்கி உள்ளது. இது அரசியல் காரணமா அல்லது உண்மையிலேயே இக்காரணம் அப்பகுதியில் உள்ளதா என்றால், இரண்டும் தான் என்று கூற வேண்டும்.

1983ல் எம்ஜியார் இத்திட்டத்தை எக்காரணங்களை முன்னிட்டு நடத்த திட்டமிட்டாரோ, அக்காரணங்கள் எதுவும் நிவர்த்திக்கப்படாமலே கடந்த 40 வருடகாலமாக உள்ளது. காரணம் அதைச் செய்ய எம்ஜியாரை தவிர வேறு யாருக்கும் மனம் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எம்ஜியார் செய்ய நினைத்து அரசியல் காரணம் அல்ல, அது சமூக, பொருளாதார காரணம், அன்றைய நிலையில் எந்த பொருளாதார வளர்ச்சியும் அற்ற நிலையில் தென்மாவட்டங்கள் இருந்த நிலையில் மற்றும் தலைநகரை அணுக அதிக பயணமும், பணச் செலவுகளும் நாட்களும் ஆவதால் தென்பகுதி மக்கள் அதிக துன்பதை அடைகின்றனர் என்பதை உணர்ந்தே அதை செய்ய துணிந்தார். அப்போது அப்பகுதி மக்கள் அதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். தங்களுக்கு அது ஒரு பொன் நாளாக அமையும், பல காரணங்களுக்கு சென்னைக்கு சென்று வருவது பெரிய செலவினங்களையும், கால விரையத்தையும், பயண து£ரத்தையும் ஏற்படுவதாக கருதியவர்களுக்கு எம்ஜியாரின் அறிவிப்பு மகிழ்சியை ஏற்படுத்தியது. துரதிஷ்டவஷமாக அந்நிகழ்வு நடைபெறாமலே போனது.

40 ஆண்டுகள் கழித்தும் அதற்கான, பொருளாதார, சமூக காரணங்கள் அப்படியே இருக்கின்றன. படித்து முடித்த இளைஞர்கள் வேலை தேடி தலைநகர் நோக்கி ஓடி வரவேண்டியுள்ளது. அப்படி ஒடி வருபவர்கள் சுரண்டி பிழைக்கும் தலைநகர்வாசிகளிடம் அவர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை வாடகைக்காகவும், உணவுக்காகவும் செலவழித்தது போக எஞ்சியதை ஊருக்கு அனுப்பி வந்த போது, அவர்கள் இவ்வாய்ப்பு வசதிகள் நம் ஊர் அருகில் இருந்தால் இத்தனை செலவுகளை செய்ய வேண்டியதில்லையே என்று எண்ணினர்.

இப்படியாக சென்ற தலைமுறையினருக்கும், நிகழ்கால தலைமுறையினருக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் மதுரையோ, திருச்சியோ ஒரு தலைநகரமாக ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அக்கனவை நனவாக்கும் திட்டமாக மதுரை அதிகமுக செயற் கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வந்துள்ளனர். இதில் திமுக கருத்துச் சொல்லாமால் பின் தங்கி உள்ளது. மேலும் தென்பகுதி மக்களின் செல்வாக்கை இழக்கும் நிலைக்கும் சென்றுள்ளது.

அதிமுகவுக்கு இது அரசியல் காரணமாக இருந்தாலும், இத்திட்டம் அப்பகுதியின் நீண்ட நாள் கனவு என்பதே உண்மை. தென்பகுதி எந்த திட்டங்களும், தொழிற்சாலைகளும் இல்லாமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி டாக்டர் சேதுராமன் மூவேந்தர் முன்னேற்ற கழகம் தலைவர் தலைமையில் தென்பகுதியை தனிமாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று போராட்டங்களும் நடந்தன. அக்கொள்கைகள் இன்னும் நீர் பூத்த நெருப்பாகத்தான் இருக்கிறது. அது 2ம் தலைநகர் வரும் பட்சத்தில் அடங்க வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால் அது தனி மாநில போராட்டத்திற்கு மக்களை கொண்டு செல்லும் என்பது உண்மை.

அதிமுகவின் அரசியல் காரணங்கள் என்னவென்றால் முக்குலத்தோர் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதியில் தங்கள் செல்வாக்கை தக்க வைக்க இக்கோரிக்கையை எழுப்பி உள்ளனர். இது வரும் காலங்களில் தனி மாநில கோரிக்கையாகவும் எழக் கூடும். காரணம் அதிக செல்வாக்கு உள்ள அவர்கள் மதுரையை தலைநகராகக் கொண்டு மாநிலம் அமையுமேயானால் முக்குலத்தோர் முதலவராக தொடர்ந்து நீடிக்க செய்ய முடியும். தற்போதய தமிழ்நாட்டில் எடப்பாடியிடம் இருந்தே ஓபிஎஸ் ஆல் தர்மயுத்தத்தில் ஜெயிக்க முடியவில்லை. தனது ஆதரவாளர்களுக்கு எந்த பதவிகளையும் பெற்றுத் தர முடியவில்லை. இது எடப்பாடிக்கு வைக்கப்பட்ட செக்காகவும் பார்க்க முடியும். விரைவில் தேர்தல் வர இருப்பதால், இக்கோரிக்கைகளை முன் எடுப்பதன் மூலம் ஓபிஎஸ் கோஷ்டி தங்கள் பலத்தை காட்ட முயற்சிக்கலாம். இதில் அவர்களுக்கு மக்கள் ஆதரவும் கிடைக்கும். பவர் பாலிட்டிக்ஸ் அதிமுகாவில் ஆரம்பமாகிவிட்டது என்பதை இது காட்டுகிறது. அதற்கு ரொம்பவும் அடிப்படை காரணிகளை கையில் எடுத்துள்ளனர் என்பதையும் பார்க்க முடிகிறது. இதில் எடப்பாடி எந்த கருத்தையும் சொல்லாமல், இது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று நழுவியுள்ளது, இக்கருத்தில் அவருக்கு உடன்பாடு இல்லையோ என்று கருதத் தோன்றுகிறது. இப்போதாவது முதல்வரின் கருத்து குறித்து ஸ்டாலின் கருத்து சொல்லியிருக்கலாம். மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பில் அவரின் கருத்து எதுவும் வராதது, தென்பகுதி மக்களுக்கு ஏமாற்றமே. இருந்த போதும். அதிமுக இக்கருத்தை மக்களிடம் கொண்டு சென்று அரசியல் அறுவடை செய்ய காத்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எது எப்படி இருந்தாலும், இக்கோரிக்கை வலுப்பெற்று 2ம் தலைநகர் தென்பகுதியில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பது மட்டும் நிச்சியம்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com