தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 791 பேருக்கு தொற்று

Advertisements
சென்னையில் வேகமாக கொரோனா பரவுகிறது தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 791 பேருக்கு தொற்று

தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 94 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,544 ஆண்கள், 2,247 பெண்கள் என மொத்தம் 5,791 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 5 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 115 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 929 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,280 பேரும், கோவையில் 596 பேரும், சேலத்தில் 378 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 14 பேரும், ராமநாதபுரத்தில் 11 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 68 லட்சத்து 88 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 462 ஆண்களும், 2 லட்சத்து 30 ஆயிரத்து 316 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 30 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 23 ஆயிரத்து 399 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 74 ஆயிரத்து 920 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 53 பேரும், தனியார் மருத்துவமனையில் 27 பேரும் என 80 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 19 பேரும், திருப்பூரில் 8 பேரும், சேலத்தில் 6 பேரும், கோவை, கடலூரில் தலா 5 பேரும், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, வேலூரில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நெல்லை, திருச்சியில் தலா இருவரும், விருதுநகர், விழுப்புரம், திருவாரூர், தேனி, தென்காசி, சிவகங்கை, நீலகிரி, நாகப்பட்டினம், மதுரை, கன்னியாகுமரியில் தலா ஒருவரும் என 27 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 313 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 706 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 936 பேரும், கோவையில் 472 பேரும், செங்கல்பட்டில் 402 பேரும் அடங்குவர். இதுவரையில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 341 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 943 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 263 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 592 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com