கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?

Advertisements
கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்
ஜெனீவா,
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுபாடுகளை பல்வேறு நாடுகள் விதித்த போதிலும் தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த  முடியவில்லை. பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக ஊரடங்கு விதித்த நாடுகளும் பின்னர் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டன. இதனால், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிக்கும் மும்முரமாக நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டங்களில் உள்ள தடுப்பூசிகள் எப்போது பொது பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பதே பல நாடுகளின் ஏக்கமாக உள்ளது. இந்த நிலையில், இந்நிலையில், கொரோனா தடுப்பூசி எப்போது என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்ய  உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்றார்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com