‘இரண்டாம் குத்து’ படத்தின் போஸ்டரை பார்க்கவே கூசுகிறது : இயக்குநர் பாரதிராஜா

Advertisements

இரண்டாம் குத்து படத்திற்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சினிமா வாழ்க்கை முறையை சொல்லலாம் தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்த விதத்தில் சரி? நான் கலாச்சார சீர்கேடு என கூறும் நபர் அல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பையும் விழுந்து ரசிப்பவன். ஆனால் இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்களால் பார்க்கவே கூசினேன்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் உள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசி இருக்கும்? எத்தனை வளர் இளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும். கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா முன்வந்தோம். இதையெல்லாம் அனுமதி இன்றி வெளியிட கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது. நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறிவார்களோ என்று கவலை கொள்கிறேன்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com