“நான் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை” – கண்கலங்கிய வடகொரிய அதிபர்

Advertisements

"நான் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை" நாட்டு மக்களைப்பார்த்து கண்கலங்கிய வடகொரிய அதிபர்
வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இராணு அணி வகுப்பு, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.இந்த இராணுவ அணி வகுப்பு வடகொரியா ஹவாசோங் -16
என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தியது. வடகொரியா இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதம் பயங்கரமானது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில், இந்த இராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சியில் போது பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
டெக்னாலஜி பயன்படுத்தி லீட் ஸ்கூல் அதன் கூட்டாளர் பள்ளிகளுக்கு மேம்பட்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கல்வியை வழங்குகிறது. உங்கள் குழந்தை முன்னேற க்ளிக் செய்யவும்.
வழங்குவோர் Lead School
அவர் பேசியது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், எங்கள் நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
ஆனால், அதை நான் திருப்திகரகாக செய்ய தவறிவிட்டேன். நான் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, இதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த நாட்டை வழிநடத்திய தந்தை மற்றும் தாத்தாவைப் பற்றி கூறிய கிம் ஜாங், அதன் பின் இந்த நாட்டை வழி நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி, என் முயற்சிகள் எப்போதும் நேர்மையாகவே இருக்கும், தங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று தந்தை மற்றும் தாத்தாவை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.இது குறித்து பேசும் போது, கிம் கண்கலங்கிவிட்டதாகாவும், கிம்மின் உரையைக் கேட்டு அங்கிருக்கும் மக்கள் பலரும் கண்கலங்கிவிட்டதாகவும், இராணுவ வீரர்களுக்கு அவர் ஆற்றிய உரையைக் கண்டு சில இராணுவ வீரர்களும் உணர்ச்சியில் கண்கலங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், கிம்மின் இந்த உணர்ச்சிவசமான உரையைக் கண்ட ஆய்வாளர்கள் பலரும், கிம் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக இப்படி பேசியுள்ளதாக கூறுகின்றனர்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com