பாஜக போட்டுவைத்திருக்கும் திட்டம்-குஷ்பு?

Advertisements

மோடியை விமர்சித்தார்

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சியை வலுப்படுத்த விரும்பும் பாஜக, அதற்காக மக்களிடம் பிரபலமாக உள்ள திரைபிரபலங்கள், பிற கட்சி தலைவர்கள், பலரும் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் குஷ்பும் பாஜகவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இப்படி பிரபலங்களை வரிசையாக சேர்ப்பதன் மூலம் திமுகவுக்கு வலுவான போட்டியை உருவாக்க முடியும் என்று பாஜக நம்புவதாக கூறப்படுகிறது.

 

முன்னதாக நடிகை குஷ்புவிடம், நீங்கள் பாஜகவில் சேரப்போவதாக சொல்கிறார்களே.. உண்மையா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு.. இல்லவே இல்லை என்று மறுத்தார். இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜகவில் சேரப்போவதாக தகவலை கேட்டு லுசு பசங்களா என்று கூட திட்டினார்.

குஷ்பு உருக்கம் காங்கிரஸில் அதிருப்தி ஆனால் அண்மையில் பேசிய கூட்டம் ஒன்றில் என்னை காங்கிரஸ் கட்சி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியுடன் குஷ்பு இருந்தது வெளிப்படையாக தெரிந்தது. மோடியை விமர்சித்தார் உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் ஹத்ராஸ் பலாத்கார விவகாரத்தில் கூட குஷ்பு பாஜகவை கடுமையாக விமர்சித்தார்

. இந்த விவாகரத்தில் பாஜக சரியாக செயல்படவில்லை என்றார். பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்திருந்தார். குஷபு சேர காரணம் இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக என்ன காரணம் என்று குஷ்புவிடம் கேட்ட போது, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் வெறும் உத்தரவுகளை மட்டும் போடுகிறார்கள். மக்களுக்காக உழைப்பவர்கள், கட்சிக்காக உழைப்பவர்களை ஒடுக்குகிறார்கள் என்று கூறினார்.

நடிகை குஷபு திமுகவில் இருந்து காங்கிரஸில் இணைந்தார். அதன்பிறகு தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். பலரும் பாஜகவில் குஷ்புவை பாஜக இணைத்துக்கொண்டதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் 2021 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக சவால் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறது. 2021 தேர்தலுக்கு திட்டமிட்டு நிறைய தலைவர்களை கொண்டுவர பாஜக விரும்புகிறது. குறிப்பாக திரை பிரபலங்கள் பலரையும் வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறக்க விரும்புகிறது

.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com