இந்திய பொருளாதாரம் 10.3 சதவீதம் சரிவடையும்

Advertisements
நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 10.3 சதவீதம் சரிவடையும் - பன்னாட்டு நிதியம் கணிப்பு
வாஷிங்டன்,
பன்னாட்டு நிதியம் வெளியிட்டுள்ள உலக பொருளாதார பார்வை பற்றிய அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நடப்பு ஆண்டில் உலக பொருளாதாரம் 4.4 சதவீதம் சரிவடையும். அடுத்த ஆண்டு 5.5 சதவீத வளர்ச்சியுடன் மீண்டு எழும். அமெரிக்க பொருளாதாரம் இந்த ஆண்டு 5.8 சதவீதம் குறைவதுடன், அடுத்த ஆண்டு 3.9 சதவீதமாக உருவெடுக்கும்.
இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு 10.3 சதவீதம் சரிவடையும். ஆனால், அடுத்த ஆண்டு 8.8 சதவீத வளர்ச்சியுடன் மீண்டு எழும். அதன்மூலம், வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற அந்தஸ்தை மீண்டும் பெறும்.
இந்த வளர்ச்சி விகிதம், சீனாவின் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி (8.2 சதவீதம்) கணிப்பை விட அதிகம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com