ஒரே நாளில் 52,518 பேருக்கு கொரோனா-பிரான்சில்

Advertisements
 தொற்று உறுதி

பிரான்சில் ஒரே நாளில் 52,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரான்சில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 30-ந்தேதி அமலுக்கு வந்த இந்த ஊரடங்கு ஒரு மாத காலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் பிரான்சில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.
அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 14 லட்சத்து 66 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 416 பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் மொத்த பலி 37 ஆயிரத்து 435 ஆக உயர்ந்துள்ளது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com