பிரான்சில் ஒரே நாளில் 60,486 பேருக்கு தொற்று உறுதி

Advertisements
பிரான்சில் ஊரடங்கிற்கு மத்தியில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 60,486 பேருக்கு தொற்று உறுதி
பாரீஸ்,
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. குறிப்பாக பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
அந்த வகையில் அந்த நாட்டில் வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 486 பேருக்கு புதிதாக வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பிரான்சில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 61 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதேபோல் அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதாவது அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 828 பேர் கொரோனாவால் உயிரிழந்ததன் மூலம் மொத்த பலி 39 ஆயிரத்து 865 இருந்துள்ளது. இதற்கிடையில் பிரான்சில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2-வது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com