24 மணி நேரத்தில் 6,953 பேருக்கு கொரோனா-டெல்லி

Advertisements
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுடெல்லி,
டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,784 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் 79 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,912 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி முழுவதும் தற்போது 40,258 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 3,83,614 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com