பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர் – பிரதமர் மோடி

Advertisements
பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர் - பிரதமர் மோடி
புதுடெல்லி,
நாடு முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய பீகாா் சட்டப் பேரவைத் தோதலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் நிதீஷ் குமாா் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வென்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. மெகா கூட்டணி 113 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி அம்மாநில வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “  ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது. பாஜக கூட்டணி வெற்றிபெற வாக்களித்த பெண்களுக்கு நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com