அமெரிக்காவின் பைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஆசிய கண்டத்தில் புதிய சிக்கல்

Advertisements
அமெரிக்காவின் பைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஆசிய கண்டத்தில் புதிய சிக்கல்
வாஷிங்டன்
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்போது புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தானது நோயாளிகளில் 90 சதவீதம் வரை பலன் அளிக்கிறது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.இதனையடுத்து இந்த தடுப்பு மருந்தானது அடுத்த மாதம் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டது.
பல நாடுகள் தங்கள் கோடிகணக்கான டோஸ்களுக்கு ஒப்பந்தங்களும் மேற்கொள்ள ஆயத்தமாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 400 கோடி மக்கள் ஆசிய கண்டத்தில் வாழ்கின்றனர்.அதாவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் மூன்று பங்கு மக்கள்தொகை ஆசியாவிலேயே உள்ளது. ஆசிய நாடுகள் வெப்ப மண்டலங்கள் ஆகவே உள்ளன.
இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காலநிலை அளவு அதிகமாகவே உள்ளது.பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பு மருந்து மைனஸ் 94 டிகிரி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலை நாடுகளில் குளிர் நிலவுவதால் அங்கு இவற்றை பாதுகாப்பது மிக எளிது. ஆனால் வெப்ப மண்டலங்களில் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்வது மிகக் கடினம்.இதனால் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை ஆசிய நாடுகள் விலை கொடுத்து வாங்கினாலும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இதனைக் கொண்டுசேர்ப்பது, மேலும் பாதுகாப்பது கடினமான ஒன்று என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கினறனர்.இந்த விவகாரம் தற்போது பைசர் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com