Kathir Krishnamurthi முனைவர் ஸ்ரீதர் நடராஜன்(Natarajan Shriethar)

Advertisements
படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு
Kathir Krishnamurthi
முனைவர் ஸ்ரீதர் நடராஜன்(Natarajan Shriethar)
1930 வாக்கில் எடிங்டன் குவாண்டம் கோட்பாடு (அணுக்களின் உலகத்திற்கு பொருந்தும்) மற்றும் பொது சார்பியல் (இது அகிலத்தை விவரிக்கும்) ஆகியவற்றை இணைக்கும் ஒரு மிகப் பெரிய இலட்சியக் கோட்பாட்டை வகுப்பதில் ஈடுபட்டார். இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் ஒரு பொதுவான கோட்பாடாக இருக்க வேண்டும் என்பதை எடிங்டன் அவரது வாழ்க்கைப் பணியின் உச்சமான குறிக்கோளாகப் பார்த்தார்.
எடிங்டனின் வெளிப்படையான ஒப்புதலுடனும், குறிப்பாக, இலண்டனில் நடந்த ராயல் வானியல் சங்கத்தின் கூட்டத்தில் தனது முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற ஆலோசனையுடனும் சந்திரசேகர் மகிழ்ச்சி அடைந்தார். அவர் தனது ஆய்வுக்கட்டுரையைத் தயாரித்தார்; ஆனால் கூட்டத்திற்கு முந்தைய நாள், அதே தலைப்பில் எடிங்டன் ஒரு சொற்பொழிவை நிகழ்த்துவதாக சந்திரசேகர் அறிந்து கொண்டார். அவர் குழப்பமடைந்தார். ஆனால் அதைப் பற்றி மேலும் சிந்திக்கவில்லை.
ஜனவரி 11, 1935 அன்று, வானியற்பியலில் முன்னணி நபர்கள் அனைவரும் ராயல் வானியல் சங்கத்தில் குழுமி இருந்தனர். சந்திரசேகர் தனது ஆய்வுக்கட்டுரையை வழங்கினார். ஒரு வரைபடத்தைக் காட்டி, ஒரு குறிப்பிட்ட நிறைக்கு மேலே உள்ள ஒரு விண்மீன் அதன் நிறையைத் தவிர்க்க முடியாமல் உருக்குலைந்துவிடும் என்பதை வெளிப்படையாக தெளிவுபடுத்தியது. எடிங்டன் தனது முடிவுகளை நிதர்சனமாக ஆதரிப்பார் என்று சந்திரசேகர் கருதி அமர்ந்தார். ஆனால், அதற்கு மாறாக எடிங்டன் சற்று வித்யாசமாக செயல்பட்டார். எடிங்டன் தனது புகழ்பெற்ற சொற்பொழிவு திறன்களின் முழு சக்தியையும் அந்த இளைஞனைத் தோற்கடிக்கப் பயன்படுத்தினார்.
சந்திரசேகரின் கோட்பாடு வெறும் கணித விளையாட்டுதான் என்று எடிங்டன் வாதிட்டார். ஆயினும், அவரது வாதங்களில் உண்மையில் எந்த அடிப்படையும் இல்லை. ஒரு நட்சத்திரத்தைப் போன்ற மிகப்பெரிய ஒன்று எப்படி திடீரென்று மறைந்துவிடும்? என்று எடிங்டன் வாதிட்டார்.
எடிங்டனின் வாதங்கள் ஆதாரமற்றதாகவும் மிகவும் சந்தேகத்திற்குரியதாகவும் இருந்தது. ஆனால் இயற்பியல்வாதிகளிடையே எடிங்டன்னின் நற்பெயரின் காரணமாக யாரும் சந்திரசேகருடன் உடன்படத் துணியவில்லை. சந்திரசேகருக்குப் பதிலளிக்க வாய்ப்புகூட வழங்கப்படவில்லை.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com