அமெரிக்க அதிபர் தேர்தலில்டொனால்ட் டிரம்ட் வெற்றி

Advertisements
அமெரிக்க அதிபர் தேர்தலில் நானே வெற்றி - டொனால்ட் டிரம்ட் டுவீட்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய ஜோ பைடன் (77 வயது) அமோக வெற்றி பெற்றார். ஆனால் அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பைடனின் வெற்றியை ஏற்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றதாகவும், ஜனநாயக கட்சியினர் மோசடி செய்து தனது வெற்றியை திருடிவிட்டதாகவும் அவர் கூறி வருகிறார். பல மாகாணங்களில் டிரம்ப் தரப்பில் கோர்ட்டுகளில் வழக்கு களும் தொடரப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றதாக டிரம்ப் சொல்வதை அவரது தீவிர ஆதரவாளர்கள் அப்படியே நம்புகின்றனர். இதனால் அவருக்கு ஆதரவாக அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணிகளை நடத்திக்காட்டினர்.
இந்தநிலையில், தேர்தல் மோசடி மூலம் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக டிரம்ப் நேற்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  இந் நிலையில், தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார். ஜார்ஜியாவில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கை போலியானது என டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com