கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வருவோம்-கமலா ஹாரிஸ்

Advertisements
நிபுணர்கள் ஆலோசனைப்படி கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வருவோம்; கமலா ஹாரிஸ்
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்று முறையே அதிபர் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அந்நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக உள்ளது.  அதனை எதிர்கொள்ள சரிவர பணிகளை மேற்கொள்ளவில்லை என அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு உள்ளது.  இது தேர்தலிலும் எதிரொலித்தது என்றே கூறலாம்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 2.46 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.  1.1 கோடி பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  அமெரிக்காவில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தே காணப்படுகிறது.
இந்நிலையில், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள கமலா ஹாரிஸ் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், நிபுணர்கள் கூறும் விசயங்களை கவனத்தில் கொண்டு, நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை மற்றும் தொடர்புகளை கண்டறிவோம்.  தடுப்பு மருந்துகள் பாதுகாப்பு நிறைந்தவை என உறுதி செய்யப்படும்.  இதன்பின்னர் அவை அனைவருக்கும் இலவச அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com