பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு

Advertisements
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
புதுடெல்லி,
பிரிக்ஸ் நாடுகளின் 12-வது மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ரஷியா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும், சீனா சார்பில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கும், ரஷியா சார்பில் அதிபர் விளாடிமிர் புதினும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் கொரோனா தொற்று, பயங்கரவாதத்தை ஒடுக்குவது, சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.
இந்தியா- சீனா இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கிழக்கு லடாக்கில் எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில், இந்த மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com