பிரம்மச்சரியம் அடையப் பட்டே ஆக வேண்டும்

Advertisements
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்செக்ஸ்ஸை போல் இன்பம் தரும் ஒரு விஷயம் உயிரினங்களுக்கு வேறு ஒன்று இல்லை.
அதே நேரம்
பல மடங்கு துன்பமும் அது தரவல்லது.
உயிரினங்களில் மனிதனைத் தவிர செக்ஸுக்காக உயிரிழக்கும் ஆண் இனங்களே அதிகம். அங்கே பலவானுக்குத்தான் அந்த இன்பம் சொந்தம். அதை வேறு ஒன்று பெற நினைத்தால் அந்த பலவானுடன் மோத வேண்டும். இங்கே இரண்டில் ஒன்று இறப்பது நிச்சயம்.
மிக மிக பெரிய மனிதர்களின் கீர்த்திகள் அனைத்தும் இந்த செக்ஸ் பலவீனத்தால் அபகீர்த்தி ஆகிப் போவதை நம்மால் காண முடிகிறது.
எனவே
சட்டப்படியான நமக்கே உரித்தான சொந்தத்தில் இத்தகைய துன்பங்கள் குறைவு. அந்த செக்ஸ்ஸை நாம் மக்களுக்கு வலியுறுத்தும் தளத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
சங்கல்ப விதைகளில் இந்த செக்ஸ் சங்கல்பம் மிகவும் முரட்டுத் தனமானது.
அனைத்து சங்கல்ப விதைகளுமே தவ விழிப்புணர்வினால் நன்றாக வறுக்கப் பட வேண்டும். வறுக்கப்பட்ட விதைகள் மீண்டும் முளைக்காது. இந்த செக்ஸ் சங்கல்ப விதை மட்டும் அவ்வளவு எளிதாக வறுபடாது.
அவைகளை நாம் அவைகள் தரும் துன்பங்களை மனதில் அடிக்கடி அசை போடுவதன் மூலமும், அருவெறுப்பு எனும் ஆயுதம் துணை கொண்டும் எப்படியாவது வறுத்தே தீர வேண்டும். அதில் மிச்ச மீதி வைக்கவே கூடாது.
ஆக
சங்கல்பங்களை வறுத்து அவைகளை துறந்தவனே துறவி ஆகிறான்.
என்னதான் அனுபவித்தாலும் அடுப்பில் மீண்டும் மீண்டும் விறகைப் போடுவது போன்றதுதான் இந்த செக்ஸ். அனுபவிக்க அனுபவிக்க அது தடித்துக் கொண்டே போகும்.
பெண்களின் அருவெறுப்பான விஷயங்களை ஆண்களும், ஆண்களின் அருவெறுப்பான விஷயங்களை பெண்களும் அடிக்கடி நினைவு கூர்ந்தால் இதிலிருந்து இருவருக்குமே விடிவு கிடைக்க வாய்ப்பு உண்டு.
பிரம்மச்சரியம் அடையப் பட்டே ஆக வேண்டும்!
அது புரிதலினால் நடக்க வேண்டுமே ஒழிய கட்டுப்பாடுகளை நமக்கு நாமே உருவாக்கி ஒழிக்க முயலக் கூடாது. அப்படி செய்வதால் விதைகள் வறுபடாது.
அவைகளை விடாது சம்யமம் செய்யும் போது புரிதல்கள் நடந்தேறி செக்ஸ்ஸூம் கடக்கப் படுகிறது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com