மாற்றவே முடியாத எதார்த்தம் என்பது நிறையவே நம்மைச் சுற்றிலும் உண்டு!

Advertisements
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்மாற்றவே முடியாத எதார்த்தம் என்பது நிறையவே நம்மைச் சுற்றிலும் உண்டு!
உதாரணமாக…
பூமியில் இருந்தபடி நிலவின் மறுபக்கத்தை யாராலும் நேரடி பார்வையால் பார்த்துவிட முடியாது!
இப்படி நேரடியாகப் பார்க்கவே முடியவில்லை என்பதற்காக நிலவிற்கு மறுபக்கம் இல்லாமல் போவதில்லை.
அம்மறுபக்கத்தைப் பார்க்க ஆசைப்படுபவர்கள், எதை ஆதாரமாக வைத்து நிலவிற்கு மறுபக்கம் உண்டு என்ற அசைக்க முடியாத ஒரு முடிவிற்கு வந்திருப்பார்கள் என்றால்…
அது
“விசுவாசம்” என்பது ஆகும்!
சொன்னவனை நம்புவது என்பதுதான்!
இப்படி நம்பியான பிறகே நிலவின் மறுபக்கத்தைக் காண்பதற்கான முயற்சி தொடங்கப்படுகிறது.
ராக்கெட்,விண்கலம் என்பவைகள் உருவாக்கப் பட்டு நிலவின் மறுபக்கம் பார்த்து வெல்லப்பட்டது.
“விசுவாசம்!” இதுதான் அவ்வெற்றிக்கான முதல்படியாக இருந்தது!
“Christ” தன்ணை முதன்முதலாக அணுகுபவர்களிடம், “நீ என்னை விசுவாசிக்கிறாயா” என்ற கேள்வியை முன்வைப்பார்.
முதலில் நம்பிக்கை வேண்டும்!
கடவுளை காணும் விசயத்தில் இந்த நம்பிக்கைதான் ராக்கெட்டின் முதல் ignition!
Ignition ஏ ஆகவில்லை என்றால், பயணம் தொடங்கவே தொடங்காது.
கடவுள் என்பவர்-உனக்கு வாய்க்குள் திணித்து வைத்து ஊட்டப்பட்ட தீவணம் அல்ல! அப்படீயே நீ விழுங்கி விடுவதற்கு!
உன் தாயிடம் இத்தகைய ஊட்டலை நீ எதிர்பார்!
கடவுள் என்பவர்-கையில் பிரம்பும், சாட்டையும் வைத்திருக்கும் சட்டாம்பிள்ளையாகிய master கிட்ட தான் கிடைக்கக் கூடியவர். அவர் கொஞ்சம் வலியை தரத்தான் செய்வார். “நோகாம நுங்கு” என்பது உலகில் கிடையாதல்லவா!? அவருக்கு நீ கொடுக்கும் சம்பளம் இந்த “விசுவாசம்”தான்!
மாறாக…
சட்டாம்பிள்ளைத் தனம் பேசி வருபவன் எவனாகிலும் கடவுளை நெருங்கவே முடியாது என மெய்யாகவே நான் உங்களுக்கு உரைக்கிறேன்!
சிவனின் படம்,முனிவனின் படம், புத்தனின் படம், சித்தனின் படம் என்று எல்லாமே தவ சொரூபத்தில்தான் உள்ளதை கவனித்தால்…
தவம் எப்படியெல்லாம் வலியுறுத்தப் படுகிறது என்பது சொல்லாமலேயே இங்கு விளங்கும்!
கொல்லைக்கு போவாய், பல்லு விளக்குவாய், குளிப்பாய், திண்பாய், தொழிலுக்குப் போவாய், அரட்டையடிப்பாய்,சினிமா போவாய்,டிவி பார்ப்பாய்,தண்ணி- யடிப்பாய்,உடலுறவு கொள்வாய், தூங்குவாய்…
இவ்வளவும் செய்யும் உனக்கு ஒரு ஒருமணி நேரம் தவம் இருக்க முடியலையாக்கும்!?

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com