சந்திரா நிறைவுரை:

Advertisements
படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவுசந்திரா நிறைவுரை:
மண்ணில் இருப்பதை விளக்கும் இயற்பியலே தடுமாறும் உலகில், விண்ணில் மீன் உருக்குலைந்து கருத்துளையாக முடியும் என்று சொன்னவர் சந்திரசேகர். எந்தளவுக்கு பேரரறிவு இருந்திருக்க வேண்டும். அவர்தான் ஆகாயத்தையும் அண்டப்பெருவெளியும் போகாமலே பார்க்கமாலே சொல்லிட்டார்; சொர்கங்கீது இருக்கும் என்று ஒரு கூட்டம் பகவத்து கீதையை படிக்கச் செல்லிக் கருத்து கேட்டது. அண்ணன், படிக்கவே இல்லை பெருசா. திரும்பக் கேட்டவுடன் ‘ நான் நாத்திகன்’ என்றவுடன்தான் ஆள உட்டானுக. அந்தளவுக்கு இயற்பியலையும் கணக்கையும் வைத்து, பல்லாயிரம் கோடி மைல் தள்ளியிருக்கும் விண்மீன்களை அளக்கும் கணக்கப் போட்டவரே சொல்லிட்டார்; நடையக் கட்டுங்கடா, என்று கலைந்தனர்.
அந்த எடுங்டன் எந்தளவுக்கு சந்திராவை படுத்தியிருந்தார். சந்திரா சென்னை பிரசிடென்சியில் 1930 ஆண்டு இளங்கலை முடித்தவுடனே பேராசிரியர் பவுளரிடம் முதுகலை படிக்க உதவித் தொகை பெறுகின்றார். பவுளர் செய்திருந்த விண்மீனின் நிறை பற்றிய கோட்பாட்டை ஐன்சுடீனின் சார்ப்பியல் நோக்கோடு அணுகி திருத்தங்கள் செய்ததில்தான் அவருடைய பெரும் பங்களிப்பாக நான் பேசுகின்றோம். அதை எல்லாம் அவர் 1932 ஆன் ஆண்டே நிறுவிட்டார். 40 ஆண்டுகளுக்கு பிறகே கருத்துளைகளை கண்டு அங்கீகாரம் கிடைத்தது.
எடிங்டனின் போக்கு எப்படி விவரிப்பீர்கள் என்று கேட்டவுடன், ‘இனத் துவேசம்’ என்று அஞ்சாமல் சொல்லிவிட்டார். எடிங்டன் சம்பவங்களால், ஆய்வுக்கு உதவித்தொகை கிடைத்திருந்தாலும், பிற வாய்ப்புகளையும் பரிசீலித்து வந்தார். வாய்ப்புகளும் அவரை தேடி வந்த வண்ணம் இருந்தன. முது முனைவர் வாய்ப்புகள் ஆர்வர்டு பல்கலையில் கிடைத்தாலும் பணிவாக ஏற்கவில்லை.
சிக்காகோ பல்கலையின் தலைவர் இராபர்டு அச்சின்சு சந்திராவை எப்படியாவது அமெரிக்காவுக்கு இழுத்து நல்ல பணியில் அமர்த்திவிடவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்.
பேராசிரியர் பதவியும் கொடுத்து அழைத்தார். பல்கலையில் சந்திராவுக்கு சில நேரங்களில் இன அடிப்படையில் சிக்கல் வந்தபோதும் முன்னின்று தீர்த்து வைத்தார். சந்திராவின் சம்பளத்தை இரட்டித்து அவரை இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் தலையிட்டார். பிரின்சுட்டன் பல்கலை அவரை இரண்டுமடங்கு ஊதிய உயர்வுடன் அழைத்தபோது தலைவர் அச்சின்சு உடனே ஊதியத்தை உயர்த்தி சிக்காகோவில் இருக்க வைத்தார்.
சந்திராவும் உயிர் பிரியும் வரை சிக்ககோ பல்கலையில் பணியாற்றினார். தலைசிறந்த ஆசிரியராக விளங்கினார், அவருடைய மாணவர்களில் இருவர் அவருக்குமுன் நோபல் பரிசு வென்றனர்.
சந்திராவின் நினைவாக NASA என்ற அமெரிக்க விண்வெளி நிறுவனம் தனியொரு நோக்ககம் அமைத்துள்ளது. சந்திராவின் துணைக்கோள் 86,000 மைல் உயரத்திலுள்ள சுற்றுப்பாதையில் இருந்து விண்மீன்களும் கருத்துளைகளும் உமிழ்கின்ற X கதிர்களை உணர்ந்து படமாக தரை நிலையத்துக்கு அனுப்பி வைக்கின்றது.
தமிழரா? சந்திரா இன்றைய பாக்கிசுத்தானின் இலாகூரிலல் பிறந்தாலும், தாயார் அவருக்கு வீட்டிலே தமிழ் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்துவிட்டார். தந்தை கணக்கும் இயற்பியலும் சொல்லிக்கொடுத்து வீட்டிலே அவர் 12 ஆண்டுகள் நல்ல கல்வி பெற்றுவிட்டார். தாய் மாமன் இராமன் பெற்ற நோபல் பரிசையும் வென்று சாதனை படைத்துவிட்டார்.
சந்திரா என்ற பேருக்குப் பொருத்தமாக அவர் பேரில் சந்திரா என்ற கோள் நமக்குமேல் சுற்றிவருகின்றது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com