பிரிட்டனில் ஒரு வாரத்தில் 1.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Advertisements
பிரிட்டனில் ஒரு வாரத்தில் 1.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்
லண்டன்,
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தையடுத்து இங்கிலாந்தில் பைசர் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அந்நாட்டு அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் கடந்த 8 ஆம் தேதி  பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு, வயதானோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8-ம் தேதி தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்ட நிலையில் முதல் வாரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை இங்கிலாந்து சுகாதாரத்துறை  வெளியிட்டது.
அந்த தகவலின்படி இங்கிலாந்தில் டிசம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 16 வரை 7 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸ் தற்போது போடப்பட்டுள்ளவர்கள் தடுப்பூசியின் 2-வது டோஸ்-ஐ 21 நாட்களுக்கு பின்னர் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com