1,174 பேருக்கு கொரோனா பாதிப்பு-தமிழகம்

Advertisements
தமிழகத்தில் இன்று மேலும் 1,174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 1,174 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 03 ஆயிரத்து 516 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 745 ஆக உயர்வடைந்து உள்ளது. சென்னையில் இன்று மேலும் 342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,21,244 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,942 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமக தற்போது 9,829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com