கொரோனா தடுப்பூசி :அதிர்ச்சியில் மக்கள்

Advertisements
கொரோனா தடுப்பூசி :  முதலையாக மாறலாம்; பெண்களுக்கு  தாடி வளரலாம் நாங்கள்  பொறுப்பல்ல  கைவிரித்த  நாடு ; அதிர்ச்சியில் மக்கள்
பிரேசிலியா,
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல பலன் தருவது உறுதியானதால், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளில் அந்த நாடு உலக அளவில் 2-வது இடத்தில் இருக்கிறது. கடந்த  24 மணி நேரத்தில் 823 கொரோனா நோயாளிகள்  இறந்ததை அடுத்து பிரேசிலின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 185,650 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேசிலில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும், அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படாது என்றும் அந்த நாட்டில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளப்போவதில்லை என ஜெயிர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் முதலையாகவும் மாறலாம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கூறியுள்ளார்.
உலகையையே உலுக்கி வரும் கொரோனா வைரசை அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறிய இவர், தற்போது இப்படி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போல்சோனாரோவுக்கு கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தனிமைப்படுத்திக்கொண்ட போல்சோனாரோ ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துவந்தார்.
இதற்கிடையில், பைசர் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக பிரேசில் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும் அதை போட்டுக்கொள்ளப்போவதில்லை என பிரேசில் அதிபர் போல்சோனாரோ சமீபத்தில் தெரிவித்திருந்தார். அது தனது தனிப்பட்ட உரிமை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்கள் முதலையாகவும் மாறலாம் அதிபர் போல்சேனாரோ தெரிவித்துள்ளார்.பைசர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் (பிரேசில் அரசு போட்டுள்ள ஒப்பந்தம்) மிகவும் தெளிவாக உள்ளது. தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு நாங்கள் (பிரேசில் அரசு) எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சினை. நீங்கள் மனிதநேயமற்றவராக மாறினால், ஒரு பெண்ணுக்கு  தாடி வளரத் தொடங்கினால் அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று அவர் மேற்கோள் காட்டி கூறி உள்ளார்.
இதனால் பிரேசில் நாட்டு மக்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு ஏதேனும் பக்க விளைவுகள் வந்துவிட்டால், என்ன செய்வது? கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com