ஏமன்,
ஏமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏமன் நாட்டின் தெற்கு பிரிவினைவாதிகளும், பன்னாட்டு நாடுகளின் அங்கீகாரம் பெற்ற அரசும் இணைந்து கடந்த 18ஆம் தேதி புதிய அரசை அமைத்தன. இதற்கான பதவியேற்பு நடந்து முடிந்த நிலையில் புதிதாக பதவியேற்ற பிரதமரும், மந்திரிகளும் ஏமன் நாட்டில் உள்ள ஏடன் விமான நிலையத்தில் வந்திறங்கினர்.
இந்நிலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து மெய்ன் அப்துல்மாலிக், யேமனுக்கான சவுதி தூதர் முகமது சையத் அல்-ஜாபர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.